உலகத்தில் எந்த ஆண்களுக்கும் அடிக்காத யோகம் இந்திய ஆண்களுக்கு அடித்திருக்கிறது அதுவும் சாதாரண யோகமில்லை, ராஜயோகம்.
செய்தி இதுதான் : ரஷ்யாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து விட்டதாம். இந்த நிலை நீடித்தால் அங்கு ஆட்களே இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டி வந்துவிடுமாம். அதனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு என்றே ஆண்களை இறக்குமதி செய்யலாம் என்று ஒரு புரட்சிகரமான யோசனையைத் தெரிவித்திருக்கிறார் மரியா என்கிற பெண்ணியவாதி.
அதிலும் “மற்ற நாட்டு ஆண்களைவிடவும் இந்திய ஆண்கள்தான் ‘இலட்சியக் கணவர்களாக’ இருப்பார்கள்...
உலகமே இடிந்து விழுந்தாலும் ‘காரியமே கண்ணாக’ இருப்பவர்கள் இந்திய ஆண்கள்தான்...’’ என்று அடித்துச் சொல்கிறார் இந்த மரியா தனது ஜிணீstவீஸீரீ மிஸீபீவீணீ என்கிற புத்தகத்தில்.
இந்த “உற்பத்தி’’ விஷயத்தில் மட்டும் கவலையே படவேண்டாம் ரஷ்யர்கள். ‘ம்‘ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்....’நீ’... ’நான்’...என்று ஆளாளுக்கு ரயிலேறி அடச்சே.....விமானமேறி விடுவார்கள் நம்மவர்கள்.
என்ன... இதில் ஒரே ஒரு பிரச்னைதான்.... “கிளைமேக்ஸில்’’ ஏதாவது சிக்கல் என்றால் ‘ஊக்குவிப்பதற்கு’ சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமாரையோ... டாக்டர். ஷர்மிளாவையோ..... அல்லது நாராயணரெட்டியையோ உடன் அனுப்பி வைக்க வேண்டியிருக்கும். அவ்வளவுதான்.
இது ஒரு புறமிருக்க.... இப்போது இரண்டுக்கு மேல் பிள்ளை பெறுபவர்களுக்கு பத்தாயிரம் டாலர் பரிசளிக்க முடிவு செய்திருக்கிறது ரஷ்ய அரசு. பத்துக்கு மேல் பிள்ளை பெறுபவர்களுக்கு “வீரத்தாய்” பட்டமும் கொடுத்து....ஒரு வீர வாளையும் பரிசாகக் கொடுக்கலாம் அவர்கள்.
இதன் உச்சகட்டமாக..... “நீங்கள் இதுவரை தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்கியது போதும்....இனி நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப் (கவனிக்க: அவரவர் வீட்டுக்கு) படையெடுத்துப் போய் “அந்த” உற்பத்தியைப் பெருக்குங்கள்’’ என்று அறிவித்ததோடு செப்டெம்பர் 12 அன்று விடுமுறையும் விட்டிருக்கிறது அரசு.
அதுசரி, எதற்காக செப்டம்பர் 12_ஐ “உற்பத்திக்கான” நாளாக தேர்ந்தெடுத்தார்களாம்? அதில்தான் இருக்கிறது ரஷ்யர்களின் தேசபக்தி.
செப்டம்பர் 12_ல் செயலில் சுறுசுறுப்பாக இறங்குபவர்களுக்கு.....
இலக்கும் சரியாக அமைந்து.... கணக்கும் சரியாக அமைந்துவிட்டால்..... சரியாக அடுத்த ஜூன் 12_ல் குவா...குவாதான். ஏனென்றால், ஜூன் 12 தான் ரஷ்யாவின் தேசிய தினம்.
இத எப்படி எடுத்துகறதுனு எனக்கு தெரியல, உங்களுக்கு?
சுட்டது குமுதம்.com
No comments:
Post a Comment