Tuesday 9 October 2007

புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.........

‘சொர்க்கத்தின் வாசலில்’ அன்று ஏகப்பட்ட கூட்டம். வாசலில் நின்று கொண்டிருந்த கடவுளின் ஏஜெண்ட் ஒவ்வொருவரையும் யார் என்று விசாரித்த பிறகே உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்.

முதலில் எதிர்ப்பட்ட ஐன்ஸ்டீனிடம்.....”நீங்கள்தான் உண்மையான ஐன்ஸ்டீன் என்பதை எப்படி நம்புவது? நிரூபித்துக் காட்டுங்கள்’’ என்று கூற....

”எனக்கொரு கரும்பலகையையும், சாக்பீசையும் கொடுங்கள். நிரூபித்துக் காட்டுகிறேன்’’ என்றார் ஐன்ஸ்டீன். இரண்டும் கொடுக்கப்பட்டது.
ஆற்றல்....நிறை....என ஏதேதோ கணக்குப் போட்டு தான் கண்டுபிடித்த E-MC2 என்கிற ஃபார்முலாவை நிரூபித்துக் காட்ட.... “அட...நீங்க உண்மையிலேயே ஐன்ஸ்டீன் தான். உள்ளே போங்கள்’’ என்று வழிவிட்டார் கடவுளின் ஏஜெண்ட்.
அடுத்து வந்தவரோ உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காஸோ. அவரையும் நிரூபித்துக் காட்டச் சொல்ல... பிக்காஸோ கரும்பலகையில் முன்னர் ஐன்ஸ்டீன் எழுதியிருந்த சூத்திரத்தை அழித்துவிட்டு வரையத் தொடங்கினார். அவர் வரைந்த அற்புதமான ஓவியங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சிப் பெருக்கில் அப்படியே கட்டித் தழுவி.... ”நீங்க மாபெரும் கலைஞர் பிக்காஸோதான். நம்புகிறேன். உள்ளே போங்கள்’’ என்று வழி விட்டார் கடவுளின் ஏஜெண்ட்.

அடுத்து வந்து நின்றவர் மற்றவர்களைப் போல் இல்லை. அவர் ஒரு மகா மேதை.

ஆனால் அவரோ காவலுக்கு நின்றவரைத் தள்ளிவிட்டுவிட்டு உள்ளே போக முயற்சிக்க....

“முதலில் நீங்கள் யாரென்று சொல்லி நிரூபியுங்கள். அப்புறம் அனுமதிக்கிறேன்’’ என்று கடவுள் ஏஜெண்ட் கடுப்புடன் கூற....

“நான் தான் ஜார்ஜ் புஷ்’’ என்றார் புஷ்.

“சரி நீங்கள் தான் ஜார்ஜ் புஷ் என்பதை எப்படி நம்புவது? உங்கள் அறிவுத் திறமையால் உங்களை நிரூபித்துக் காட்டுங்கள்’’ என்றார் க.ஏ.

“எப்படி நிரூபிப்பது?’’ என்று மீண்டும் புஷ் கேட்க...

“உங்களுக்கு முன்பு வந்த ஐன்ஸ்டீனும்....பிக்காஸோவும் எப்படி நிரூபித்தார்களோ அப்படி’’ என்றார் கடவுளின் ஏஜெண்ட்.

“அது சரி, யார் அந்த ஐன்ஸ்டீனும்.....பிக்காஸோவும்?’’ என்றார் ஜார்ஜ் புஷ்.

“இம்புட்டு “அறிவு’’ இருக்குன்னா....சந்தேகமேயில்லை நீங்க ஜார்ஜ் புஷ்ஷேதான். உள்ளே போங்கள்’’ என்று கதவுகளை அகலத் திறந்துவிட்டபடி வெளியில் குதித்தோடினார் கடவுளின் ஏஜெண்ட்.

குமுதம்.com

No comments: