Friday 26 October 2007

அம்பு குறி இட்ட இடத்தை பார்க்கவும்!


எழுத்தறிவில்லாத ஒருவன் மன்னரின் முன் சென்று கன்னா, பின்னா, மன்னா, தென்னா என்று கூறினானாம். அதை கேட்ட மன்னன் அவனை பெரும் புலவர் என்று கருதி பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்து அனுப்பினானாம். மன்னன் ஏன் அவ்வாறு செய்தான்? கன்னா என்பதற்கு கண்ணனே என்றும், பின்னா என்பதற்கு கண்ணனுக்கு பின்னால் வந்தவனே என்றும், மன்னா, தென்னா என்பதற்கு தென் நாடே போற்றுகின்ற மன்னனே என்றும் அர்த்தம் கொண்டானாம் மன்னன்.

நகைப்புக்குரிய இந்த விஷயம் எந்த காலத்திலோ நடந்தது என்றுதானே நினைக்க தோன்றுகிறது. அதுதான் இல்லை. இப்போதும் அப்படிப்பட்ட புண்ணியவான்கள் இருக்கிறார்கள். ரஜினி ஒரு விழாவில் யதார்த்தமாக விரலை ஒரு நாட்டிய முத்திரையில் வைத்திருக்க, அதற்கு பொழிப்புரை, பதவுரை, முகவுரை, முன்னுரையெல்லாம் எழுத ஆரம்பித்திருக்கின்றன நமது பத்திரிகைகள். ரஜினி பிடித்திருப்பது 'சோடிகா முத்திரை' என்கிறார் ஒரு சிவாச்சாரியார்.

கட்டை விரல் பரமாத்மா, சுட்டுவிரல் ஜீவாத்மா, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணைய வேண்டும் என்பதைதான் ரஜினி அப்படி உணர்த்தினார் என்கிறார் இன்னொரு சிவாச்சாரியார். அடக்கடவுளே... உங்களை பற்றி அந்த ரஜினிதான் என்ன நினைப்பார்? சும்மா பொடி போடுற ஞாபகம் வந்தது. விரலை அப்படி வச்சிருந்தேன். அடப்பாவிகளா, அதுக்குகூட கதை எழுதிட்டீங்களே என்று சிரிப்பாரோ?!
தமிழ்சினிமா.com

13 comments:

சதங்கா (Sathanga) said...

அற்புதம். வாய் விட்டுச் சிரிக்க நல்ல பதிவு.

Anonymous said...

:)))))
இவங்க அடிக்கிற கூத்து தாங்கல..
------------------

எனக்கும் உங்களைப் நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி :)

Aani Pidunganum said...

vaanga sathanga,
//அற்புதம். வாய் விட்டுச் சிரிக்க நல்ல பதிவு.//

Indha madhiri kichu kichu padhivu thedi podaradhu ungala madhiri ellam rasika thaan :) mikka danks (thanks)

Aani Pidunganum said...

aaha, thalaivareh (dubukku),

vaanga,
varavu nalvaravu aagatum :)

செல்வம் said...

இவங்க ரஜினிய வச்சு ஒன்னும் காமெடி, கீமெடி பண்ணலியே

Aani Pidunganum said...

செல்வம்,

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

இருந்தாலும் சொல்ல முடியாது, யார் கண்டா இருக்கலாம் ;-)

Geetha Sambasivam said...

அப்பாடா, எதுக்கு வந்தேனோ அந்த வேலை முடிஞ்சுது, வர்ட்ட்டாஆஆஆ?

cheena (சீனா) said...

இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். இவர்களை நம்பி பல பேர் இருக்கிறார்கள். நல்ல தொரு சிரிப்பு

Anonymous said...

இரண்டும் வித்தை காட்டுபவர்கள். நகைச்சுவை மன்னர்கள். நிஜத்தில் போராடும் போராளிகளைக் கண்டுகொள்ளமாட்டார்கள்.

வாள் காகித அட்டையில் தயாரிக்கப்பட்டது.


புள்ளிராஜா

Itz me!!! said...

hi..your post on rajini's mudhra is truly very hilarious....nice meeting you and your family in the party..I shall also continue to be up -to-date with your posts.

Dharshna Sharth Kumar

Aani Pidunganum said...

புள்ளிராஜா,
sariyah sonninga, oru nimicham "வாள் காகித அட்டையில் தயாரிக்கப்பட்டது" endha "ல்"nu oru doubt vandhadhu, apparam thaan purinjudhu. Eppadi irundhaalum comedy thaan.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிரித்தேன்.

Geetha Sambasivam said...

வந்தாச்சு, ஒண்ணையும் காணோமே? சும்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ வெறும் அலட்டல்தானா? இதுக்குத் தானா இம்புட்டு பில்ட்-அப்? :P