Tuesday 9 October 2007

மல மல மல மலைக்கோட்டை

ஊருக்குள் ஒரு தாதா. வெளியூரிலிருந்து ஒரு இளைஞன் வருகிறான். இப்போது உங்களுக்கு கதை புரிந்திருக்குமே. அதேதான்.

தமிழ் சினிமாவில் சில காட்சிகளை ஐந்து வருடங்களுக்குத் தடை செய்ய வேண்டும்.




வில்லன் காரிலிருந்து இறங்கும்போது, கீழ்க் கோணத்திலிருந்து காலையும் காரையும் திரை முழுக்க காட்டுவது. புவி ஈர்ப்பு விதிகளை மீறி பறந்துகொண்டே சண்டை போடுவது...

நூறு பேர் வந்தாலும் ஹீரோ ஒரே அடியில் வீழ்த்துவது. விழுபவர்கள் எல்லோரும் காய்கறி வண்டியில் விழுவது...


மற்றவர்களை சுட கிடைக்கும் துப்பாக்கி, ஹீரோ வரும்போது மட்டும் ஒளிந்துகொள்வது...


‘மலைக்கோட்டை’யில் இதுபோன்ற காட்சிகள் மலிந்து கிடக்கின்றன.

ஆக்ஷன் படங்கள் இரண்டு ரகம்.

திரையில் ஹீரோ வில்லன்களைத் துரத்தி, புரட்டி எடுக்கும் போது நாமும்கூட சேர்ந்து புரட்ட வேண்டும் என்ற எண்ணம் வர வைப்பது ஒரு ரகம்.

திரையில் ஹீரோ, வில்லன்களை அடிஅடியென்று அடித்துக்கொண்டிருக்கும்போது எப்போது அவர் அடித்து முடிப்பார், வீட்டுக்கு கிளம்பலாம் என்பது இன்னொரு ரகம்.

மலைக்கோட்டை இரண்டாவது ரகம். இப்ப இருக்கற முக்காவாசி ஆக்ஷன் தமிழ் படம் இரண்டாவது ரகம்.
குமுதம்.com

1 comment:

Naresh Kumar said...

மூனாவது ரகம் கூட இருக்கு!

ஹீரோ, வில்லன்களை அடிஅடியென்று அடிக்கிறப்போ நம்மளை அடிக்கிற மாதிரியே இருக்கும். அந்த அளவு அழிச்சாட்டியம் பண்ணுவாங்க!

இதெல்லாம் படம் இல்லைங்க, பாடம்