Friday, 5 October 2007

அமெரிக்காவில் ஒரு பகுத்தறிவாளர் ! – எஸ். குருமூர்த்தி

அமெரிக்க குட்டி கருணாநிதிக்கு நேர்ந்த கதி – ஒரு உண்மைக் கதை. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள், தங்களைப் பற்றியும், நம் நாட்டைப் பற்றியும் தாழ்வான எண்ணங்கள் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நாடுகளைப் பற்றி உயர்வாகவும் நினைக்கிறார்கள். இப்போது வெளிவந்திருக்கும் ஒரு அமெரிக்கச் செய்தி, நம்முடைய கவனத்திற்குரியது.

அமெரிக்காவின் ஒரு "பகுத்தறிவாளர்' செய்திகளில் வெளிப்பட்டார். அவருடைய பெயர் ஸ்டீவ் பிட்டர்மேன். அவர் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஒன்றான ஐயோவா மாநிலத்தில் உள்ள, "ரெட் வோக்' என்கிற குட்டி நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியர். அந்தக் கல்லூரி அரசு உதவியுடன் நடக்கும் கல்விக் கூடம்.

ஈரோடில் கருணாநிதி கீமாயணம் துவங்கிய மூன்றாம் நாள் – செப்டம்பர் 18ஆம் தேதி – பிட்டர்மேன் தன்னுடைய மாணவர்களுக்காக மேற்கத்திய கலாச்சாரம் பற்றிய வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பு முடிந்த பிறகு மாணவர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவனிடம் அவர் பைபிளின் முதல் பகுதியான பழைய ஏற்பாட்டில் இடம் பெறும், முதல் ஆண் – பெண் ஜோடியான ஆதம் ஏவாள் பற்றி குறிப்பிட்டு, ""இந்த ஜோடி பற்றிய பைபிள் கதையை அப்படியே நம்பிவிடக் கூடாது'' என்று கூறினார். இந்தப் பேச்சு, தன்னுடைய மதத்தை இழிவுபடுத்துவதாகும் – எனக் கூறி, "நான் உடனேயே வக்கீலிடம் சென்று உங்கள் மேல் வழக்குத் தொடர வழி செய்கிறேன்' என்று அவரை எச்சரித்தான் அந்த மாணவன்.

அவருடைய இந்த விளக்கம் ஐயோவா மாநில டெலிவிஷன் இணைப்பு மூலமாக, இதர மாணவர்களுக்கும் ஒளிபரப்பப்பட்டதால், மேலும் பல மாணவர்களும் "தங்கள் மத உணர்வுகளை அந்தப் பேராசிரியர் இழிவு செய்தால், அவருக்கு எதிராக வழக்கு தொடர்வோம்' என்று குரல் கொடுத்தனர்.
ஆதம்ஏவாள் கதை ஒரு கற்பனை என்று கூட அவர் கூறவில்லை; அவர் பைபிளின் "பழைய ஏற்பாட்டை' மத அடிப்படையில் இல்லாமல், கல்வி முறையில் விளக்கினார் என்று செய்திகள் கூறுகின்றன. பகுத்தறிவாளர் ஸ்டீவ் பிட்டர்மேன் இப்படி பேசிய 48 மணி நேரத்துக்குள் டெலிஃபோன் மூலமாக பேராசிரியர் பதவியிலிருந்து "டிஸ்மிஸ்' செய்யப்படுகிறார். அந்தக் கல்லூரியின் கல்வித்துறை துணை முதல்வர் லிண்டா வைலட், அவருக்கு டெலிஃபோன் செய்து பதவியிலிருந்து "கல்தா' கொடுக்கிறார்.
"இப்படிப்பட்ட புகழ்பெற்ற, அரசு நடத்தும் சமுதாயக் கல்லூரியிலா, இதுபோன்ற நியாயமற்ற கேட்பாரற்ற நடவடிக்கை? என்று ஆடிப் போய்விட்டார், அமெரிக்காவின் பகுத்தறிவாளர். அரசியல் சாசனத்தில் பேச்சுரிமைக்குப் பெயர் போன நாடாயிற்றே அமெரிக்கா! அங்கு எப்படி இப்படி... என்று அந்தக் கல்லூரியின் அதிகாரிகளிடம் பத்திரிகையாளர் கேட்டபோது, அவர் கொடுத்த ஒரு வரி இதுதான். ""நாங்கள் செய்தது – பிட்டர்மேனை டிஸ்மிஸ் செய்தது – பேச்சு சுதந்திரத்திற்கு விரோதமானதல்ல. அதற்கு அர்த்தம், பிட்டர்மேன்தான் பேச்சுரிமை வரம்புகளை மீறி பேசியிருக்கிறார்''.

""எப்படி அந்தப் பேராசிரியரை பதவி நீக்கம் செய்யலாம்? பைபிள் ஒரு கட்டுக்கதை. ஆதம்ஏவாள் ஒரு கற்பனை என்பது எல்லா கல்வியாளர்களும் ஒப்புக்கொண்ட விஷயமாயிற்றே'' – என்று கூறி பிட்டர்மேனுக்கு அத்திப்பூத்தாற் போல ஒரு நாத்திகவாதி – ஹெக்டர் அவலோஸ் – மட்டுமே வக்காலத்து வாங்குகிறார். ""அப்படியானால் உலகம் ஆறு நாட்களில் உருவாக்கப்பட்டது என்று பைபிள் கூறுவதை நம்ப வேண்டுமா?'' என்று கேட்கிறார் அவலோஸ். இவர்களுடைய பகுத்தறிவு வாதத்தை அந்த முற்போக்கு சமுதாயத்தில் யாரும் சட்டை செய்யவேயில்லை.
தனிப்பட்ட முறையில் மக்களுடைய மதஉணர்வுகளைப் புண்படுத்திய பிட்டர்மேன், பேராசிரியர் பதவிக்கு லாயக்கில்லாதவர். ஆனால் இங்கு பொதுமேடையிலும், டெலிவிஷனிலும் ஸ்ரீராமரை கட்டுக்கதை என்று கூறியது மட்டுமல்லாமல், "ராமன் குடிகாரன்' என்று கீழ்த்தரமாக வசைபாடிய கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியில் தொடர்கிறார். அவர் தன்னை "கருணாநிதி' என்று யாராவது கூறினாலே தனக்கு மரியாதைக் குறைவு – என்று நினைக்கும் அளவுக்கு புண்படும் மென்மையான மனம் படைத்தவர்.

ஆனால் பிறர் உணர்வுகள் புண்படுவது பற்றி அவருக்குக் கவலையோ வருத்தமோ கிடையாது. மேலும் இப்படி அவர் தன்னை முற்போக்குவாதி, மதச்சார்பற்றவர், சிறுபான்மையினரின் காவலர், பகுத்தறிவாளர் என்றும் பிரபலப்படுத்திக் கொண்டிருப்பவர். இப்படிப்பட்ட கருணாநிதியையும் அமெரிக்காவின் ஸ்டீவ் பிட்டர்மேனையும் ஒப்பிடும்போது, ஒரு விபரீதமான கற்பனை எழத்தான் செய்கிறது. நம் கருணாநிதி அமெரிக்காவில் பிறந்து, அந்தப் பேராசிரியர் போல பகுத்தறிவு பாடம் நடத்தியிருந்தால், ஸ்டீவ் பிட்டர்மேனுக்கு நேர்ந்த கதிதானே அவருக்கும்? அதுபோல இவருக்கு இங்கு நடக்காததற்குக் கருணாநிதியே கூறியது போல, நம் நாட்டு மக்கள், குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள், மூடர்களாகவும், மௌடீகர்களாகவும் இருப்பதுதான் காரணமா?

பின்குறிப்பு: அமெரிக்க பேராசிரியர் ஸ்டீவ் பிட்டர்மேன் பற்றிய விவரங்களை மேலும் அறிய http://foxnews.com/story/0,2933,297847,00.html என்கிற இணைய தளத்தைப் பார்க்கவும். அதற்கு மேலும் விவரம் வேண்டுபவர்கள் இந்தச் செய்தியை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் "மேகன் ஹாக்கின்ஸ்' அவர்களை, 0015152848169 என்கிற தொலைபேசியிலோ அல்லது mehawkins@dmreg.com என்கிற ஈமெயில் விலாசத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

சுட்டது துக்ளக்

5 comments:

Thamizhan said...

அமெரிக்கா மடம்,கடவுள் என்றவற்றில் மிகவும் பிற்போக்கான கருத்துள்ளது அனைவரும் அறிந்ததே.தலைவர் புஷ் அவர்கள் கடவுள் அவரிடம் ஈராக்குடன் போர் தொடுக்கச் சொன்னார் என்று சொன்னவர் தான்.

ஆனால் அங்கே இந்தப் பேராசிரியர் நீதி மன்றத்திற்குச் சென்று நீதி பெற்றிடுவார்.மனித உரிமையில் பல மைல் கற்கள் தாண்டி வந்துள்ளனர்.

இதே அமெரிக்காவில் தான் பகுத்தறிவு வாதியான பேராசிரியர் ரிச்சர்டு ஹாக்கின்சின் காட் டெலுசன்,என்னும் நூல் அமோகமாக வாங்கப் பட்டுள்ளது.
பல பல்கலைக் கழகங்கள் அவரை அழைத்துப் பேசச் சொல்லி விவாதிக்கின்றனர்.

மாசிலா said...

நல்ல பதிவு ஆணி பிடுங்குபவரே(;-D)!

இப்போதெல்லாம் அமெரிக்காவில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைவிட உலகம் தானாகவே உருவாகி இதில் உள்ள ஒவ்வொன்றும் சார்லஸ் டார்வின் கொள்கைப்படி சிறிது சிறிதாக காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றம் அடைந்ததா அல்லது அனைத்தும் இன்று இருப்பது இருப்பது போலவே கடவுளால் உருவாக்கப் பட்டதா என்பதே பெரிய வாதமாக இருப்பதாக படித்ததாக உண்டு. இதைப்பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்!

பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

http://www.positiveatheism.org/hist/quotes/twain.htm
இவரும் ஒரு பிரபல அமெரிக்க எழுத்தாளர் தான்.

Aani Pidunganum said...

thamizhan

mikka nandri, neram kidaikumbodhu vandhu paarthu sollunga, innum niraiyah sondhamaga ezhudha muyarchiseikiraen

Aani Pidunganum said...

vaanga மாசிலா,

Sondhamah ezhudha muyarchi seikiraen, vellai (aani) niraiyah irukara naala sondhamah ezhudha neram kidaika maatingudhu, ungal encouragementku mikka nandri. Kandippa soon will comeup at ur requested topic...