Wednesday 24 October 2007

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க


வாழை மரம் வடக்குப் பக்கமா தார் போடணும். வேற திசையில தார் போட்டுச்சுனா, அந்த வீடு அவ்வளவுதான்; வெளங்காதுன்னு சொல்றது சம்பிரதாயம். இது உண்மையா? வாழை மரத்துக்கும், வீடு வெளங்கறதுக்கும் என்ன சம்பந்தம்? விளக்கமா தெரிஞ்சுக்கலாமா...

உண்மை என்னன்னா... இது விவசாயத்தோடு சம்பந்தப்பட்டது. வாழை பயிரிடுவதற்கு தகுந்த காலமா, ஆடி மாசத்தைச் சொல்வோம். ஆடிப் பட்டம் தேடி விதைனு சொல்வாங்களே! அப்ப அடிக்கற காத்தை ஆடிக் காத்துன்னு சொல்வாங்க. அதையே இன்னொரு விதமா& தென்மேற்குப் பருவக் காத்துனும் சொல்வோம். இந்தக் காத்து ஒழுங்கா வீசினால், நாடு வளமா இருக்கும். இது முறையா வீசுதா இல்லையானு நமக்கு எப்படித் தெரியும்? ஆடிக் காத்து ஒழுங்கா வீசுனா, வாழை மரம் வடக்குப் பார்த்துத் தார் போடும். அதை வெச்சு ஆடிக் காத்து நல்லா வீசுது; பயிர் பச்சையெல்லாம் நல்லா விளையும்னு தெரிஞ்சுக்கலாம். அப்படி இல்லாம வாழை மரம் வேற திசையில் தார் போட்டுச்சுனா, ஆடிக் காத்து சரியா அடிக்கலை; பயிர் பச்சைங்க ஒழுங்கா விளையாது, உணவுப் பண்டங்களுக்குத் திண்டாட்டம்னு தெரிஞ்சுக்கலாம்.
ஆக, வாழைத் தார் விஷயம்& விவசாயத்துக்காகச் சொல்லப்பட்டது. இதைச் சொல்லி வெச்ச பாட்டன், பூட்டனை எல்லாம் நிக்க வெச்சு, சுத்தி வந்து தரையில விழுந்து நாம நமஸ்காரம் செய்யணும். ஆனால், நாம உண்மை தெரியாம இந்த விஷயத்தை வீட்டோட தொடர்புபடுத்தி, நாமும் குழம்பி அடுத்தவங்களையும் குழப்பறோம்.

இதே மாதிரி வீட்டுத் தோட்டத்துல ஆமணக்கு வளர்க்கக் கூடாதுனும் சொல்வாங்க. வளர்த்தால், அதன் காய் வெடிச்சுச் சிதறுவதைப் போல, அந்தக் குடும்பமும் வெடிச்சுச் சிதறிடும்பாங்க. இதுல என்ன இருக்குனு பாக்கலாமா?
பொதுவா, வெடிச்சுப் பரவும் விதைகள் கடினமா இருக்கும். ஆனால், ஆமணக்கு விதைகள் இளகின தன்மை கொண்டதா இருக்கும். வெயில் ஏற ஏற, முற்றிய ஆமணக்குக் காய்கள்லாம் வெடிச்சு, விதைகள் இறைஞ்சு கெடக்கும்.
விஷத் தன்மையோட பளபளப்பா இருக்கற அந்த விதைகளை, குழந்தைகள் எடுத்து வாயில போட்டா, என்னாகும்? விபரீதம்தான்! அதனால இதை வீட்டுத் தோட்டத்துல வளர்க்கக் கூடாதுனு சொன்னாங்க! சரி, வாங்க... அடுத்த கேள்வியைப் பார்க்கலாம்!

இதுவும் நம்ம சம்பிரதாயத்துல சொல்லப்படுற தகவலைப் பற்றிய கேள்விதான்... ‘வீட்டுல புறா வளர்க்கக் கூடாது; வளர்த்தால், புறாக்கள் எழுப்புற ‘கும்கும்’ சத்தத்தால, குடும்பம் வளராது; நசிஞ்சுடும்கறது உண்மையா?’னு கேட்டிருக்காங்க.

புறாவை வீட்டில் வளர்க்கக் கூடாதுங்கறது சரிதான். ஆனா, புறாக்களோட சத்தத்துக்கும், நம்ம குடும்பத்துக்கும் எந்த விதமான சம்பந்தமும் கெடையாது. புறாக்களோட கழிவு வாடை, பாம்புங்களைக் கவர்ந்து இழுக்கும். பகுதி & 28 படிக்க பகுதி & 29 படிக்க மேலும் படிக்க...

அதனால புறாக் கூண்டுக்கு வரும் பாம்புகள், அங்க இருக்கற புறா முட்டைகளை உடைச்சுக் குடிச்சுட்டு, கூண்டுக்குள்ளேயே மயங்கிச் சுருண்டு படுத்துக்கும். வெவரம் தெரியாம நாம புறாக் கூண்டு கிட்டப் போனால், ‘இவன் தன்னைத்தான் அடிக்க வர்றான்’னு நெனச்சு, பாம்பு நம்மளப் போட்டுத் தள்ளிடும். அப்புறம் கதை கந்தல்தான்!

இப்படி பாம்பு கீம்புனு சொல்லி, நம்மள பயப்படுத்தக் கூடாதுங்கறதால, புறாக்களோட சத்தம் குடும்பத்துக்கு ஆகாதுனு டெக்னிக்கலா சொல்லி வெச்சாங்க!’’ என்ற தாத்தா அடுத்த கேள்விக்குத் தாவினார்.

‘‘அடுத்த கேள்வியும் சூப்பர்! ‘உச்சி வேளையில கிணத்துக்குள்ள எட்டிப் பார்க்கக் கூடாது. பார்த்தால், பேய் அடிச்சு கிணத்துக்குள்ள தள்ளிடும்னு, ஊர்ப் பக்கம் சொல்றாங்களே... அது உண்மையா?’ங்கிறது கேள்வி.

மொதல்ல பேய்& பிசாசைத் தூக்கி ஓரமா போடுங்க. இல்லாட்டி, அந்தக் கெணத்துக்குள்ளேயே தூக்கிப் போட்ருங்க! பேய் பயத்தை விட்டுட்டு, கேள்விக்கான பதிலை நம்ம வழிப்படி பார்க்கலாம்!

கெணறுகள்ல அதுவும் நாம உபயோகப்படுத்தாத கெணறுகள்ள விஷ வாயுங்கற நச்சுக்காத்து உருவாகும் வாய்ப்பு உண்டு. உச்சி வெயில் நேரத்துல, சூரியக் கதிர்கள் நேரா கெணத்துல பாயும். சூடுபட்ட பால் பொங்கற மாதிரி, சூரியச் சூட்டுல, கெணத்துல இருக்கற விஷ வாயு பொங்கி மேலே வரும். அப்ப நாம கெணத்துக்குள்ளே எட்டிப் பார்த்தோம்னா விஷ வாயு தாக்கி, நாம அப்படியே அந்தக் கெணத்துக்குள்ள விழ வேண்டியதுதான்! இந்த மாதிரி விஷ வாயு தாக்கி இப்படி நடந்துச்சுனு அடிக்கடி செய்தித் தாள்கள்ல படிச்சிருப்பீங்களே...

இந்த விபரீதம்லாம் வேண்டாம்னுதான் நம்ம முன்னோர் விஞ்ஞானபூர்வமான தகவலை, இப்படி ஒரு நம்பிக்கையா சொல்லி வெச்சாங்க’’ என்ற தாத்தா குஷியாகத் தொடர்ந்தார்.
விகடன்.com

8 comments:

மாசிலா said...

பயங்கரமான ஆணிதான் போங்க!

;-D

மிக்க நன்றி.

Unknown said...

Good super matter solirukenga,enga vetu vazhai maram epdi thar podardunu parthu solren
keep it up

இலவசக்கொத்தனார் said...

நல்லாச் சொல்லி இருக்கீங்க. இந்த பின்னணி தெரியாமத்தான் நாம இந்த மொழிகளுக்கு மதிப்பே குடுக்கறது இல்லை

பினாத்தல் சுரேஷ் said...

நீங்க சொல்ற மேட்டர் நல்லாத்தான் இருக்கு.. ஆனா, ரெலவன்ஸி இழந்த பிறகும் இந்த மேட்டர்களைப் பிடிச்சுகிட்டு தொங்கறதுக்கு தானே இப்படி மூடுமந்திரமா சொல்றது அடிக்கோலிடுது?

Geetha Sambasivam said...

@இலவசம், ஆணி ஒண்ணுமே சொல்லலை! அவர் எங்கே சொன்னார்? "சக்தி விகடனை" ஸ்கான் பண்ணியே போட்டிருக்கலாம்! :P

Aani Pidunganum said...

கீதா சாம்பசிவம் madam,

Neenga sollaradhu mudhala yosichaen, moreover scan pannara vasadhi ellai enkitta. Adhuvum ellama, indha heading potaavadhu naa innum tamil type panna kathupomehnu thaan ippadi C&P (Cut & Paste) technology use pannaraen...ippa okvah

Anonymous said...

Dear madom.. neenga sonnadhu nichayamana unmai thaan endru enga oor perusuga ellam solluthunga... so, naan ungalukku Thaaaaaaaaannnnnnnnnnnkkkkkkkkkkssssssssss soliyae aaganum.....

ஜி said...

:)))))