Friday, 29 February 2008

ரொம்ப யோசிக்க வெச்சுட்டான்ய!

டிராவலர்ஸ் மெஜிஷியன்ஸ் கிராமத்தில் வேலை கிடைத்தால், நம்மில் எத்தனை பேர் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வோம் என்பது சந்தேகம்தான்! அப்படி ஓர் இளைஞன் கிராமத்து வேலையை உதறிவிட்டு, தன் கனவு பூமியான அமெரிக்கா போக விரும்புகிறான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கிளம்பும் பயணத்தில் அவன் பெறும் அனுபவங்களைப் புதுமையாகச் சொல்லும் பதிவுதான் Travellers Magician.
மலைகளின் மீது அமைந்த அந்தச் சிறிய ஊருக்குப் புது அதிகாரியாக வந்திருக்கும் 'தாந்துப்', அங்கிருக்கும் அஞ்சல் நிலையத்துக்குப் போய், வெளிநாட்டி லிருந்து தனக்குத் தபால் எதுவும் வந்தி ருக்கிறதா என்று விசாரிக்கிறான். இல்லை என்று அறிந்து, ஏமாற்றத்துடன் திரும்புகிறான். தன் அறை எங்கும் அமெரிக்கப் பெண்களின் படங்களைஒட்டி வைத்திருக்கும் அவனுக்கு, மறுநாள் அமெரிக்காவிலிருந்து கடிதம் வருகிறது. 'இன்னும் மூன்று நாளில் தலைநகரில் இருக்கும் அமெரிக்கத் தூதரக அலுவல கத்தில் இருக்க வேண்டும்' என்று அதில் எழுதியிருக்கிறது. தலைநகரில் திருவிழா துவங்குவதால், தான் அதற்குப் போக வேண்டும் என்று பொய் சொல்லி, விடுமுறை வாங்குகிறான். அமெரிக்கா கிளம்புகிற உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறான். ''நீங்க நிஜமாவே இந்தக் கிராமத்தைவிட்டுப் போகப்போறீங் களா?'' என்று கேட்கிறார் அவனது உதவியாளர். ''பின்னே, இங்கே என்ன இருக்கு? ஒரு சினிமா இல்லை, ஓட்டல் இல்லை... இணக்கமாகப் பழக பெண் கள் இல்லை'' என்று சொல்லிவிட்டுத் தனது உடை மைகளுடன் கிளம்புகிறான்.
மலையில் இருக்கும் அந்தச் சிற்றூருக்கு, வாரத்தில் குறிப்பிட்ட சில கிழமைகளில் மட்டுமே பேருந்து வந்துபோகும். அதைத் தவறவிடக் கூடாது என்று தாந்துப் வேகமாக வந்தும், பேருந்து போய்விடுகிறது. வழியில் வரும் வேறு ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறிப் போய்விடலாம் என்று பாதையோரம் நிற்கிறான். அப்போது நகரத்துக்குப் போவதற்காக வயதான ஒருவர், ஆப்பிள் கூடையுடன் வருகிறார். கொஞ்ச நேரத் தில் ஒரு புத்த துறவியும், கையில் ஒரு வாத்தியத்துடன் அங்கு வருகிறார். ''என்ன... ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா? இன்னிக்குன்னு பார்த்து ஒரு வண்டியும் காணோம். நீங்களும் வந்து உட்காருங்க. ரோட்டைப் பார்த்துக்கிட்டே இருந்தா, ஒண்ணும் ஆகப் போறதில்லை. நம்பிக்கை வலியைக் கொடுக்கும்னு புத்தர் சொல்லியிருக்கார்'' என்றபடி ஓரிடத்தில் அமர்கிறார். ''ஹலோ! போதனையை நிறுத்தறீங்களா? நான் ஏற் கெனவே எரிச்சல்ல இருக்கேன்'' என்று சிடுசிடுக்கிறான். வெகு நேரம் காத்தி ருந்தும், அந்த வழியில் எந்த வாகனமும் வரவில்லை. இருட்டத் துவங்குகிறது. வேறு வழியின்றி, மூவரும் சாலையோரம் தங்குகிறார்கள். துறவி அங்கேயே அடுப்பை மூட்டி சூப் தயாரித்துத் தரு கிறார். ''எங்கே போறீங்க?'' ''ரொம்ப தூரத்தில் இருக்கிற என் கனவு பூமிக்கு!'' என்கிறான் தாந்துப். ''கனவு பூமிக்கா?'' என்று புன்னகைக்கும் துறவி, ''நான் உங்களுக்குக் கனவு பூமி பற்றிய ஒரு கதையைச் சொல்லவா?'' என்று சொல்லத் துவங்குகிறார்.

''ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு கிராமம் இருந்தது. அங்கே இருந்த ஒரு விவசாயிக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் டாஸி. இளையவன் கர்மா. அப்பா மூத்தவனுக்கு மந்திர தந்திரங்கள் கத்துக் கொடுக்க விரும்பி, ஒரு குருகிட்டே அனுப்பிச்சார். ஆனால், டாஸி சரியான சோம்பேறி. அவன் நினைப் பெல்லாம் பெண்கள் மேல தான்! கர்மா புத்திசாலி. அவன் தினமும் அண்ண னுடைய மதிய உணவைக் கொடுக்கிறதுக்காகப் பள்ளிக் குப் போவான். அண்ணனுக் குப் பதிலா தான் பள்ளிக்குப் போனா நல்லா இருக்குமேனு ஒருநாள் ஆசைப்பட்டான். தன் அண்ணனுக்குக்கொடுக் கும் உணவில் போதை தரும் சில மூலிகைகளைக் கலந்து எடுத்துட்டுப் போனான்'' என்று சொல்ல... அந்தக் கிராமத்தின் காட்சிகள் விரிகின்றன.
'கர்மா பொருட்களை ஒரு கழுதையில் ஏற்றிக்கொண்டு, அண்ணனின் பள்ளிக்குப் போகிறான். மதிய இடைவேளையில், இருவரும் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். கர்மா அந்த மூலிகை கலந்த மதுவை அண்ணனுக்குக் கொடுக்கிறான். மகிழ்ச்சியுடன் வாங்கிக் குடித்ததும் போதை ஏறிய நிலையில், அண்ணனின் பார்வையில் பொருட்கள் ஏற்றி வந்த கழுதை, அழகிய குதிரையாகத் தெரிகிறது. அவன் சிரித்துக்கொண்டே அதன் மேல் ஏறி அமர்கிறான். கழுதை வெறிகொண்டது போல ஓடி, வெகுதூரம் பயணித்து, ஓரிடத்தில் அவனைக் கீழே தள்ளிவிட்டுச் செல்கிறது. இடியுடன் மழை கனத்துப் பெய்கிறது. கீழே விழுந்த டாஸி, அடர்ந்த காட்டுக்குள் நடந்துசெல்கிறான். அங்கு ஒரு வீடு இருப்பதைப் பார்த்துக் கத வைத் தட்டுகிறான். தாடி வைத்த முதியவர் ஒருவர், கையில் விளக்குடன் கதவைத் திறக்கிறார். அவன் நிலைமையைப் பார்த்து, காயத்துக்கு மருந்திட்டு, அவனை வீட்டில் தங்க அனுமதிக்கிறார். டாஸி சோர்வுடன் படுக்கிறான். கிழவருக்கு அந்தப் பக்கமாக ஓர் இளம்பெண் படுத்திருப்பதை பார்க்கும் டாஸியின் மனம் சஞ்சலமடையத் தொடங்குகிறது...'
கதை இத்துடன் முடிய, காலையில் சாலையோரம் தாந்துப் தூங்கிக்கொண்டு இருக்கிறான். துறவி நெருப்பை மூட்டிக் குளிர் காய்ந்துகொண்டு இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு லாரி வருகிறது. அதில் மூவரும் ஏறிக் கிளம்புகிறார்கள். வழியில் ஓரிடத்தில் லாரி நிற்கிறது. அழகிய இளம்பெண் பூனமும், அவளது தந்தையும் லாரியில் ஏறுகிறார்கள். அவர் தந்தை தாந்துப்பைப் பார்த்து, ''நீங்க கிராமத்துக்குப் புதுசா வந்த ஆபீஸர்தானே?'' என்று கேட்கிறார். ''ஆமா! எப்படித் தெரியும்?'' ''நீங்க எங்க கிராமத்தின் முக்கியமான மனிதர். உங்களைத் தெரியாம இருக்குமா?'' என்கிறார். ''இவர் கிராமத்தை விட்டுட்டு, இதைவிட நல்ல வேலையைத் தேடிப் போறார்'' என்கிறார் துறவி. பேசிக்கொண்டே பயணம் தொடர, மெதுவாகப் போகும் லாரி, பழுதாகி நிற்கிறது. எல்லோரும் இறங்குகிறார்கள். ''இன்னும் எவ்வளவு நேரமாகும்?'' என்று தாந்துப் கேட்கிறான். ''கவலைப்படாதீங்க! சீக்கிரமே முடிஞ்சிடும்'' என்று டிரைவர் சொல்ல, அழகான அந்த இயற்கைச் சூழலில் எல்லோரும் உட்கார்கிறார்கள்.

''கதையை எந்த இடத்தில் விட்டேன்? ம்... டாஸி அந்த வீட்டுல தங்கினானா..? அடுத்த நாள் காலை...'' என்று துறவி கதை சொல்லத் தொடங்க, காட்சிகள் விரிகின்றன.

'டாஸி மறுநாள் காலை கண்விழித்து, அந்த அழகிய இளம் பெண்ணைப் பார்க்க, அவள் கிழவரின் மனைவி 'தேகி' என்று தெரிகிறது. காலை உணவு பரிமாறும்போது அவளை முதல்முறையாக முழுமையாகப் பார்க்கிறான். அவளும் அவனைப் பார்க்கிறாள். அவர்கள் இருவரையும் சந்தேகமாகப் பார்க்கும் முதியவர், சாப்பாடு முடிந்ததும், அவனை அங்கிருந்து அழைத்துக்கொண்டு கிளம்புகிறார். நடுக்காட்டுக்கு அவனை அழைத்துச் சென்று, அவன் போகவேண்டிய திசையைக் காட்டிவிட்டு வீடு திரும்புகிறார்.'
லாரி மீண்டும் புறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வளைவில் லாரி நிற்க... துறவி, தாந்துப், ஆப்பிள் விற்கும் முதியவர், பூனம், அவளது அப்பா என ஐந்து பேரும் இறங்குகிறார்கள். ''நீங்களும் தலைநகருக்கா போறீங்க?'' ''ஆமா! நாங்களும் திருவிழாவுக்குதான் போறோம்'' என்கிறார் பூனத்தின் அப்பா. பூனம், ஒரு ஆப்பிளை எடுத்து நறுக்கி எல்லோருக்கும் சாப்பிடத் தருகிறாள். தாந்துப்பிடம் தரும்போது புன்னகைக்கிறாள். துறவி தாந்துப்பிடம், ''இன்னமும் நீ கிராமத்தை விட்டுப் போறதா இருக்கியா? அந்தப் பொண்ணு நீ இருக்கிற கிராமத்துலதான் வசிக்கப் போறா, தெரியுமா? அவ உன்னை விரும்புறானு நினைக்கிறேன்'' என்று சொல்ல, தாந்துப் எதுவும் பேசாமல் நடந்து வருகிறான். நெடுநேரம் நடந்து, ஓரிடத்தில் எல்லோரும் அமர்கிறார்கள்.

''சரி, நீங்க ஏன் அந்த நாட்டுக்குப் போறீங்க?'' என்று பூனத்தின் அப்பா கேட்கிறார். ''நிறையப் பணம் சம்பாதிக்க!'' ''என்ன வேலை செஞ்சு?'' ''என்ன வேலைன்னாலும் செய்யலாம். தட்டு கழுவலாம், ஆப்பிள் பறிக்கலாம்...'' அப்பா ஆச்சர்யப்பட, துறவி அவனைப் பார்த்து, ''அப்ப, ஆபீஸர் வேலையை விட்டுட்டு ஆப்பிள் பறிக்கப் போறேன்னு சொல்லு. அங்கே போய் டாஸி மாதிரி நீயும் தொலைஞ்சு போயிடாதே!'' என்று சொல்ல, டாஸியின் கதை துவங்குகிறது.
'டாஸி காட்டுக்குள் வழி தெரியாமல், மீண்டும் தேகியின் இடத்துக்கே வருகிறான். அவளது வீட்டில் சில நாட்கள் தங்குகிறான். தேகிக்கும் டாஸிக்கும் பார்வையிலேயே நெருக்கம் வளரத் துவங்குகிறது. ஒருநாள் தேகி, தன் கணவரைக் குளிக்கவைக்கிறாள். கிழவர் குளித்து முடித்து, சிறிது நேரத்தில் தூங்கிவிடுகிறார். தேகி தனியாகக் குளித்துக்கொண்டு இருக்க, டாஸி அவளை நோக்கி மெதுவாக நடக்கிறான்...'

''கொஞ்சம் நிறுத்துங்க. கார் வர்ற சத்தம் கேட்குது'' என்று தாந்துப் சொல்ல, துறவி கதையை நிறுத்துகிறார். வழியில் வரும் கார் நிற்காமல் சென்றுவிட, அங்கிருந்து நடந்து புத்தர் படங்கள் வரையப்பட்டிருக்கும் ஒரு மலையடிவாரத்துக்கு வருகிறார்கள். இருட்டத் தொடங்குவதால், அங்கேயே தங்குகிறார்கள். பூனம் அடுப்பு மூட்டிச் சமைக்கத் தொடங்குகிறாள். அவளுக்கு உதவுவதுபோல் தாந்துப் அருகில் போய் அமர்கிறான். ''பூனம், உனக்கு என்ன வயசு?'' ''பத்தொன்பது!'' ''கிராமத்து வாழ்க்கை உனக்கு போர் அடிக்கலையா?'' ''இல்ல!'' ''பாத்தா நல்லாப் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்கே. நீ மேல படிக்கலாமே?'' ''அப்பாவுக்கு உதவி செய்யணும்கிறதுக்காகத்தான் நான் படிக்கலே!'' என்று இருவரும் அன்பாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அன்றிரவு பூனம் தூங்க, தாந்துப் தூக்கம் வராமல் விழித்திருக்கிறான்.
துறவி, கதையை விட்ட இடத்திலிருந்து சொல்லத் துவங்குகிறார்... ''நாட்கள் வாரங்களாச்சு! டாஸி அங்கேயே தங்கினான். டாஸி,தேகி இருவரும் நெருக்கமாகிறார்கள். ஒருநாள் தேகி, தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லி, 'இதுஅவருக் குத் தெரிஞ்சா, நம்ம ரெண்டுபேரை யும் கொன்னுடுவாரு. இப்ப என்ன செய்யலாம்?' என்கிறாள். அன்று இரவு, மதுவில் விஷம் கலந்து கண வனுக்குக் கொடுக்கிறாள். அவர் குடிக்கிறார். ஒருநிலையில், தான் அருந்தியது விஷம் என்று அவருக் குப் புரிகிறது. தேகியை வெறித்துப் பார்க்கிறார்...''
தாந்துப் கண்விழித்து பார்க்கும்போது, விடிந்திருக்கிறது. பூனம் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள். பஸ் வருகிற சத்தம் கேட்டதும், துறவி ஓடிப்போய் நிறுத்துகிறார். ''ஒரு ஆளுக்குதான் இடம் இருக்கு'' என்கிறார் டிரைவர். ''இரண்டு நாளா நடந்து வந்திருக்கோம். ப்ளீஸ்!'' என்று துறவி கேட்க, ''மன்னிக்கணும்! அளவுக்கு அதிகமா ஏத்தினா போலீஸ் பிடிக் கும்!'' என்கிறார் டிரைவர். ''சரி, ஆப்பிள் விக்கிறவரே! நீங்க போங்க. இன்னும் காத்திருந்தா, ஆப்பிள்எல் லாம் அழுகிடும்'' என்று தாந்துப் சொல்ல, எல்லோரும் அவரை வழியனுப்பி வைக்கிறார்கள். ''இது கருணையா... இல்ல, வேறு எது வுமா?'' என்று துறவி கிண்டலாகக் கேட்கிறார். திரும்பவும் அங்கிருந்து நடக்கத் துவங்குகிறார்கள். வழியில் பூனம் அமர்ந்துவிடுகிறாள். ''ஏன், களைச்சுப் போயிட்டியா?'' ''ஆமா!'' ''நான் வேணா உன் பையைத் தூக் கிட்டு வரவா?'' ''இல்ல, நான் சமாளிச்சுக்கிறேன்!'' ''ஏன் கவ லையா இருக்கே?'' ''ஒண்ணுமில்ல... அந்த ஆப்பிள் விக்கிற முதியவரை நினைச்சேன்!'' ''ஏன்? அவரை மிஸ் பண்றமேனு நினைக்கிறியா?'' ''ஆமா!'' ''உன்னைச் சந்திக்கிற எல்லோரையுமே நீ இப்படித்தான் மிஸ் பண்றதா நினைப்பியா?'' என்று தாந்துப் புன்னகைக்கிறான். திரும்பவும் நடக்கத் துவங்குகிறார்கள்.

அப்போது ஒரு சிறிய டிராக்டர் வருகிறது. அதில் இருவருக்குதான் இடமிருக்கிறது. ''நீங்க ரெண்டு பேரும் போங்க! அவர் சீக்கிரம் போகணும்ல?'' என்று பூனத்தின் அப்பா சொல்ல, தாந்துப் மௌனமாக அவளைப் பார்க்கிறான். ''வா! அமெரிக்கா போற நேரம் வந்திருச்சு. ம்... கிளம்பு!'' என்று துறவி எழுந்திருக்கிறார். ''இது நல்ல பயணம். மகிழ்ச்சியா இருந்தது. உங்களுக்கு நன்றி!'' என்று சொல்லி, தாந்துப் எழுகிறான். பூனம் சோகமாக இருக்கிறாள். துறவியும் தாந்துப்பும் பூனத்தின் அப்பாவிடம் கையசைத்து விடைபெறுகிறார்கள். பூனமும் கை அசைக்கிறாள். தாந்துப்பும் அவள் பார்வையிலி ருந்து மறையும்வரை கையசைத்துக் கொண்டே வருகிறான்.
''சரி, நான் உனக்கு இன்னொரு கதை சொல்லவா?'' என்று துறவி கேட்கிறார். ''ரொம்ப காலத்துக்கு முன்னால, ஒரு அழகான கிராமத் துல ஒருத்தர் வாழ்ந்தார். அவர் அரசாங்க அதிகாரியா இருந்தபோதும், அமெரிக்கா போய் ஆப்பிள் பறிக்கணும்னு நினைச்சார். ஆனா, போகும் வழியில அவர் அழகான ஒரு பொண்ணைப் பார்த்தாரு...'' தாந்துப் உடனே சிரித்துக்கொண்டே, ''அதனால அவரு அமெரிக்கா போறதையே மறந்துட்டாரு!'' என்று சொல்லிப் புன்னகைக்கிறான். அழகிய மலைத் தொடர்களின் வழியே பயணம் தொடர, படம் நிறைவடைகிறது.
நமது கலாசாரம் மற்றும் பெருமைகளை மறந்து, பணத்துக்காக மட்டுமே வெளிநாட்டு மோகம்கொண்டு அலையும் இளைஞர்களின் மனநிலையை இப்படம் சுவாரஸ்யமாகப் பதிவு செய்கிறது. கதைக்குள் ஒரு கதை என டாஸியின் கதையையும், தாந்துப்பின் கதையையும் இணைத்தவிதம் புதுமையானது. பேருந்து இல்லாமல் மெதுவாக நடந்து செல்கையில் அங்கிருக்கும் இயற்கை வளமும், மனிதர்களின் அன்பும், வாழ்க்கையின் முழு மையை தாந்துப்புக்கு உணர்த்து கின்றன. தனக்கு மட்டுமே பேருந்து கிடைக்கவேண்டும் என்ற சுயநலம் மறைந்து, சக மனிதர்களின் மீதான நேசிப்பாக அது கடைசியில் மாறும் விதம் அழகு. பரபரப்பு, வேகம் என்ற மனநிலை தணிந்து, எதையும் அதன் இயல்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற புத்தரின் போதனையையும் இப்படம் பதிவு செய்கிறது. 2003ல் வெளியாகி, உலகின் கவனத்தை ஈர்த்த இந்த பூட்டான் நாட்டுப் படத்தின் இயக்குநர் கியன்ஸி நோர்பு (ஓகுட்க்பிபீசூக் சச்சுஸயு).

'இக்கரைக்கு அக்கரை பச்சை' எனும் பழமொழி பிரபலமானது. அக்கரையில் கவனம் வைத்து, அருகில் இருக்கும் பல நல்ல விஷ யங்களை நாம் கவனிப்பதே இல்லை. பெற்றோர்களைத் தனியே விட்டுவிட்டு, சம்பாதிக்கும் கனவுகளுடன் வெளிநாடு போகும் இளைஞர்கள், கடைசியில் பணத்துக்காகத் தரும் விலை பரிதாபமானது. 'கனவுகள் குறித்துக் கவனமாக இருங்கள். விழிப்பு வந்ததும், அது அவ்வளவு மகிழ்ச்சியாக இராது' என்று துறவி தாந்துப்பிடம் சொல்வது எத்தனை நிஜம்!
Rombha feel panni yosika vechutaanga indha padathula.

Thursday, 28 February 2008

டெல்லிச்சலொ


டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு, சொந்தமாக வீடுகள் இருக்கும் ஆச்சரியத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக டெல்லி பல்கலைக்கழக சமூகவியல்துறை அங்குள்ள 3 ஆயிரத்து 526 பிச்சைக்காரர்களிடம் ஆய்வு நடத்தியது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 4 பேர் பட்டப் படிப்பை முடித்தவர்கள் என்றும், 6 பேர் கல்லு£ரியில் படித்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. டெல்லியில் மொத்தம் 58 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், அதில் பெரும்பாலானவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களில் 355 பேருக்கு டெல்லியில் சொந்தமாக வீடு இருக்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இங்குள்ள பிச்சைக்காரர்கள், தாங்கள் தொழில் செய்யும் இடங்களுக்கு செல்ல பேருந்து மற்றும் சைக்கிள்களைப் பயன்படுத்துவதாகவும், சிலர் நாளன்றுக்கு 500 ரூபாய் வரை செலவு செய்து ஆடம்பரமாக வாழ்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Monday, 25 February 2008

கட்டபொம்மன் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?

ஜே.ராஜா முகம்மது என்பவர் எழுதிய, "புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நுõல் அது.
அதில் —
கப்பத் தொகை 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் கட்டமொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்ஸன், எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேயே படை திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது. இதன்படி தன்னை ராமநாதபுரத்தில் ஆக., 18, 1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்தக் கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன். அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்த போது, கட்டப்பொம்மனும், அவரது பரிவாரங்களும் ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்துõர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி 23 நாள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில் கட்டப்பொம்மன், ஜாக்சனை சந்தித்தார்.
கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, ரூ.5,000 (1080 பசோடா) மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டப்பொம்மன் ரூ.11 ஆயிரம் கிஸ்தி பணபாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது கட்டப்பொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணிநேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில் ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கை கலப்பில் கட்டப்பொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். கட்டப் பொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டப்பொம்மன் தப்பித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்டப்பொம்மன் சென்னை கவர்னருக்கு மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்.

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கை கலப்பிற்கு ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?)
கடிதத்தை கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரிக்க, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில் (டிச.15,1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரிய வந்தது.
விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கபட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லுõசிங்டன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

http://revver.com/video/169981/veerapaandiya-kattabomman/

— இப்படி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Dinakaran.com