கே : "இனி யாருக்கும் லட்சிய தி.முக. பல்லக்குத் தூக்காது' – என்ற விஜய் டி. ராஜேந்தரின் திடீர் முழக்கம் பற்றி?
ப : சரி, கட்சிக்கு ஏதாவது வேலை இருக்க வேண்டாமா? அதற்கு என்ன செய்யப்போகிறார்?
கே : "காங்கிரஸ் கட்சியினர் "காமராஜ் ஆட்சி அமைப்போம்' என்று கூறி, தி.மு.க.வினர் வீட்டில் எடுபிடி வேலைகள் பார்க்கின்றனர்' – என்று விஜயகாந்த் கூறியுள்ளது பற்றி?
ப : அந்த வேலையும் இல்லை என்றால், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் என்னதான் செய்வது? எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சிற்குப் போக வேண்டியதுதானா?
ப : அந்த வேலையும் இல்லை என்றால், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் என்னதான் செய்வது? எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சிற்குப் போக வேண்டியதுதானா?
Just துக்ளக் நக்கல்'s
தேர்தல் வரும்போதெல்லாம், நாம் பெரிய கட்சிகளால் தேடப்படும் அளவுக்கு வளர்ந்து விட்டோம். இதுவே நமக்குக் கிடைத்த பெரிய வெற்றிதான். – திருமாவளவன்
அடக்கடவுளே! தேடப்படும் நிலையில் இருப்பது கூட வெற்றியா?
எம்.எல்.ஏ. கோடீஸ்வரர் ஆகும் அதிசயம் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். – என். வரதராஜன்
அதெல்லாம் அந்தக் காலம் ஸார். இப்போது கௌன்சிலர்களே அந்த அதிசயத்தை நிகழ்த்த முடியுமே!
ஏன் இந்தப் பெயர் மாற்றம் ?
தமிழக அரசின் மின்துறை அமைச்சரின் பெயர் ஆற்காடு என். வீராசாமி என்றுதான் இருந்தது – இதுவரை. அது ஆற்காடு என். வீராஸ்வாமி என்று இனி மாற்றப்படும் என்று கெஸட் செய்தி கூறுகிறது.
தமிழக அரசின் மின்துறை அமைச்சரின் பெயர் ஆற்காடு என். வீராசாமி என்றுதான் இருந்தது – இதுவரை. அது ஆற்காடு என். வீராஸ்வாமி என்று இனி மாற்றப்படும் என்று கெஸட் செய்தி கூறுகிறது.
இரண்டு கேள்விகள் :
1. சாமி என்ற தமிழ்ப் பெயரை "ஸ்வாமி' என்ற வடமொழிப் பெயராக மாற்றுவது (தி.மு.க. கொள்கைப்படி) சரிதானா?
2. இது நியூமராலஜி சாத்திரத்துக்காகச் செய்யப்பட்ட மாறுதல் என்பது வெளிப்படை. இந்த "மூடநம்பிக்கை' பற்றித் தி.க. தலைவர் கி. வீரமணி என்ன கூறுகிறார்?
கே : "தமிழகத்தில் அடுத்து அமையப் போவது, பா.ம.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிதான்' – என்று டாக்டர் ராமதாஸ் அடித்துச் சொல்கிறாரே?
ப : அவர் இப்படித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். சாட்டையால் அடிப்பேன், பூட்டுப் போடுவேன்... என்றெல்லாம் சொன்ன மாதிரி இதுவும் ஒரு பூச்சாண்டி. அவ்வளவுதான். பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ப : அவர் இப்படித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். சாட்டையால் அடிப்பேன், பூட்டுப் போடுவேன்... என்றெல்லாம் சொன்ன மாதிரி இதுவும் ஒரு பூச்சாண்டி. அவ்வளவுதான். பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
சுட்டது துக்ளக்
No comments:
Post a Comment