தடாலடி என்றால் டி.ஆர். சமீபத்திய அவரது பாய்ச்சல் விஜயகாந்த் மீது திரும்பியிருக்கிறது! அவரிடம் பேசினோம்.
தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சியினருமே உங்களை தங்கள் பிரசாரத்திற்கு கூட்டத்தைக் கூட்டும் ஒரு பேச்சாளராகத்தான் பார்க்கிறார்கள்.
ஒரு கட்சித் தலைவராக அங்கீகரிக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
‘‘இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டக்கூடிய இவன், ஒரு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றும் அளவிற்குத் திறமையானவன், சின்னத்திரையில் பேசினால் கூட பெரிய அளவிற்கு பெண்கள் கூட்டத்தைக் கவர்ந்து இழுக்கும் டி.ஆர்.பி. ரேட்டிங்கைத் தன் கையில் வைத்திருப்பவன் வளர்ந்தால், தங்களுக்கு ஆபத்து என்று இரண்டு கழகங்களும் நினைக்கின்றன. மற்றவர்கள் வளர்ந்தால் ஆபத்தில்லை என்று நினைக்கிறார்கள். நான் ஏ.வி.சி. கல்லூரியிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் படித்தபோது நான் ஒரு பெரிய இயக்குநராக வருவேன் என்று சொன்னபோது நீங்கள் எதிர்பார்த்தீர்களா? திரையுலகத்தினர்தான் ஒப்புக்கொண்டார்களா? மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் ஐயா!’’
இவ்வளவு தூரம் திறமைசாலியாக எண்ணும் நீங்கள், யாருடன் கூட்டணி வைப்பது என்று குழம்புகிறீர்களே?
‘‘யார் சொன்னது? தி.மு.க., அ.தி.மு.க.விடம் கூட்டு இல்லை என்று சொல்லிவிட்டு, பழனி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நாற்பதாயிரம் ஓட்டுக்கள் வாங்கியபோது, அப்போது பா.ம.க.கூட வளரவில்லை. ம.தி.மு.க. தோன்றவே இல்லை. பர்கூரில் தனித்துப் போட்டியிட்டேன். ‘ஜெயலலிதாவுக்குக் கிலி’ என்று பத்திரிகைகள் கவர் ஸ்டோரி எழுதினார்கள். கடைசி நேரத்தில் தி.மு.க. வாபஸ் வாங்கியது யாருக்காக?’’
நீங்கள் மட்டும் ஓட்டு வாங்கி விட்டால் போதுமா? கட்சி வேட்பாளர்கள்?
‘‘விஜயகாந்த் 234 தொகுதிகளில் நூறு கோடி ரூபாய் வரை செலவு செய்து எத்தனை தொகுதிகளில் ஜெயித்தார். ஒன்றில்தானே! அவர்போல இவ்வளவு செலவு செய்தால் நான் ஆட்சியைப் பிடிப்பேன்.’’
சரி, லட்சிய தி.மு.க.வுக்கு எத்தனை சதவிகிதம் ஓட்டு இருக்கிறது?
‘‘பதினைந்திலிருந்து இருபது சதவிகிதம். நடுநிலையாளர்களைக் கவரும் சக்தி எனக்குள்ளது என்பதால்தான், என்னை அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பிரசாரத்திற்கு அழைக் கின்றன.’’
சரி, லட்சிய தி.மு.க.வுக்கு எத்தனை சதவிகிதம் ஓட்டு இருக்கிறது?
‘‘பதினைந்திலிருந்து இருபது சதவிகிதம். நடுநிலையாளர்களைக் கவரும் சக்தி எனக்குள்ளது என்பதால்தான், என்னை அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பிரசாரத்திற்கு அழைக் கின்றன.’’
இருபது சதவிகிதம் என்பதெல்லாம் உங்களுக்கே ஜாஸ்தியாகப் படவில்லையா?
‘‘அதைச் சொல்ல நீங்கள் யார்? (சீறுகிறார்) 2011_ல் முதல்வர் ஆவேன் என்று சரத்குமார் சொல்கிறார். விஜயகாந்த், சரத்குமார் போல் முதல்வர் என்ற அந்த மியூஸிக்கல் சேரைச் சுற்றி ஓடப்போவதில்லை. தமிழக மக்களுக்குக் குரல் கொடுப்பதில் மட்டும் முதல்வனாக இருப்பேன். எந்தப் பிரச்னை வந்தாலும் ஆளுங்கட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பவன் என்று நிரூபித்தவன்.
தி.மு.க.வை விட்டு வைகோ பிரிந்தபோது, ‘டி.ஆரின் ஆதரவு வேண்டும்’ என்று கலைஞர் அறிக்கை விட்டாரா இல்லையா?’’
சரி, இப்போது முதல்வர் கலைஞரை எதற்கு சந்திக்கப்போகிறீர்கள்?
‘‘எங்களை தேர்தல் காலத்தில் மட்டும் பயன்படுத்துவது என்றில்லாமல் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் போகிறேன். அது இருந்தால்தான் அடுத்தவர்களுக்காக குரல் கொடுக்க முடியும்! அவர் முடிவைப் பொறுத்து எங்கள் முடிவு அமையும். அவருடைய வெற்றிக்காக பாடுபட்டவன்.’’
உங்களை அவர் கறிவேப்பிலை போல பயன்படுத்திக் கொள்ளும்போது, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப அங்கே போக வேண்டும்?
‘‘காரணம், அவர் என்னுடைய அரசியல் ஆசான். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. தமிழினத்திற்காகக் குரல் கொடுப்பவர் அவர். எனக்கு அவர் மீது அபிமானம்.
அடுத்தது, தமிழ் நாட்டை ஐந்து முறை ஆண்ட கலைஞர், எங்கள் ஆதரவை வெளிப்படையாகக் கேட்கிறார். ஆனால், விஜயகாந்த் யாருமே எனக்குத் தேவையில்லை என்கிறார். ஒரு சமையல் செய்தால் கூட நான்கு பண்டங்கள் தேவைப்படுகிறது. இவர் தனியாகவே சாய்ச்சுடுவாராம்.
உங்களை உதாசீனப்படுத்திய கழகங்களை விட்டுவிட்டு தேவை யில்லாமல் விஜயகாந்தை ஏன் சீண்டுகிறீர்கள்?
‘‘ஏன் என்றால் அவர் பேச்சு! ஊழலை ஒழித்து விடுவாராம். அ.தி.மு.க.வில் இருந்த எத்தனை ஊழல் மந்திரிகள் உங்களோடு இருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுத்திருக்கிறார்? இவர் பிறந்த தினம் வறுமை ஒழிப்பு தினமாம்! ‘ஐயய்யோ! தமிழ் நாட்டில் வறுமை ஒழிந்து போச்சு சார்’ (சிரிக்கிறார்) இதைப் பார்த்து விட்டு நான் சும்மா இருக்க முடியுமா?
நான் எம்.ஏ. வரலாறு படித்தவன். விஜயகாந்தின் தகுதி என்ன? என்ன பேசறார்? எம்.ஜி.ஆரையே எதிர்த்துக் குரல் கொடுத்த எனக்கு இந்த விஜயகாந்த் யார்? நூறு கோடி ரூபாய் கட்சிக்கு செலவு செய்தாரே, எப்படி வந்தது? ஒரு தமிழன் என்ற முறையில் அவர் ஊழல் முகத் திரையைக் கிழிப்பேன்.’’
கலைஞர் டி.வி.யில் உங்களுக்கு அழைப்பு இல்லை என்று கோபமாமே?
‘‘கிடையவே கிடையாது? என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். திறந்திருக்கிறது’ என்றார்கள். அமிர்தம் மற்றும் ராமநாராயணன்கூட கேட் டார்கள். இவர்கள் செப்டம்பர் 15_ம் தேதி துவக்கம் என்றபோது, நான் வெளிநாட்டில் இருந்தேன். பிஸியாக இருந்ததால் முடியவில்லை.
அப்புறம், சன் டி.வி. அரட்டை அரங்கத்தில் எனக்குக் கிடைத்த அங்கீகாரம், நான் அடுத்த தேர்தலில் ஈடுபட்டால் எங்கள் கைக்கு வந்துவிடும் அதிகாரம்! பேச்சுத் திறமை இருக்கிறது. படிப்பு இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. உண்மை இருக்கிறது. உழைப்பு இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கிறது.’’
உங்களது அதீத தன்னம்பிக்கைதான் உங்கள் பிரச்னையே என்றால் ஒப்புக் கொள்வீர்களா?
(எழுந்து கொள்கிறார்?) ‘‘மன்மோகன் சிங் பிரதமராவேன் என்று தனது 48_வது வயதில் சொல்லியிருந்தால் அவரை பைத்தியம் என்றிருப்பார்கள். எனக்கு என்ன வயசு ஆச்சு? இருபத்து மூன்று வயதில் சினிமாவைக் கலக்கியவன். ரஜினியைத் தாண்டி வசூல் சக்ரவர்த்தியாக இருந்தவன்! (சொடுக்குப் போடுகிறார்)
புதுக்கோட்டையில் விஜயகாந்த் மாநாடு நடத்தியபோது வந்தது, அந்த ஊர்க் கூட்டம் இல்லை. சுற்றியுள்ள மாவட்ட ஆட்களை லாரிகளில் கொண்டு வருகிறார். இது பண்ருட்டி ஐடியாவாக இருக்கும். எனக்கு அப்படிச் சேர்க்கத் தேவையில்லை. என் கட்சியில் தொண்டன் அவனே செலவு பண்ண வேண்டும். விஜயகாந்த் மாதிரி பணத்தைக் கொட்டி ஆட்களைச் சேர்க்க வேண்டியதில்லை.’’
லட்சிய தி.மு.க.வின் அடுத்த லட்சியம்?
‘‘தொடர்ந்து சுற்றுப் பயணம் செய்யப்போகிறேன். மாவட்டந்தோறும் 300 கொடிகள் வீதம் முப்பது மாவட் டங்களிலும் ஏற்றப் போகிறேன். இனி எந்தக் கட்சியையும் வளர்க்கப் போகப்போவதில்லை. கூட்டணி இல்லா விட்டாலும் தனித்து என்னால் நிற்க முடியும்! தமிழகம் முழுவதும் இந்தக் கொடியை (காட்டுகிறார்) ஏற்றிக் காட்டுவேன். லட்சிய தி.மு.க.வை ஆட்சியில் ஏற்றிக் காட்டுவேன்!.
தமிழகம் முழுவதும் இந்தக் கொடியை (காட்டுகிறார்) ஏற்றிக் காட்டுவேன்.
சுட்டது குமுதம்.com நன்றி
2 comments:
He is an emotional man, he may be a lot of things but certainly not a politician.
Vaanga srikanth,
Romba nandri, Eppa paarthalum ivar emotionalaah irukaar, Paavam, ennatha pannaradhu... Idhula saadhanaiya 300 kodi ethanumnu verah sollaraar, ethitah matum katchila niraiya peru serndhuduvaangala ellai ennatha sollaradhu ponga...
Post a Comment