Friday, 21 September 2007

சுப்பிரமணியன் சுவாமி விட்ட ராம பாணம்...

ராமர் என்பது கற்பனைக் கதாபாத்திரம். ராமர் பாலம் என்று ஒன்று இல்லை’ என்பது தொல்லியல் துறையின் கருத்து என்று ராமர் பாலம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. இதைக் கண்டித்து நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியும் பிற இந்து அமைப்புகளும் இந்துக்களை மத்திய அரசு இழிவுபடுத்தி விட்டதாகப் போராட்டங்களை நடத்தியது. எதிர்ப்பின் வலுகண்டு மறுநாளே, மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட மத்திய அரசு, மாற்றுப்பாதையில் சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதாகவும் சொல்லியிருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, ஈரோடு முப்பெரும் விழாவில் பேசும்போது, ‘‘யார் ராமன்? அவன் எந்தப் பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா?’’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பியிருந்தார்.
முதல்வரின் இந்தப் பேச்சைக் கண்டித்து அவர் மீது வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்-திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, ‘ராவணன் பிராமணன், ராமன் சத்திரியன்’ என்று இன்னொரு திரியையும் பற்றவைத்திருக்கிறார்.
சுவாமியை சந்தித்தோம். ‘‘கருணாநிதி ஆவேசப்படவும், ஆத்திரப்படவும் காரணம் இருக்கிறது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொன்ன பொய்யை மறுநாளே வாபஸ் பெற்றுவிட்டதால், அதிர்ச்சியடைந்திருக்கும் கருணாநிதிக்கு என்ன பேசுகிறோம் என்றே புரியவில்லை. இனிமேல் பகுத்தறிவுக் கதைகள் பேசி அரசியல் செய்ய முடியுமா? கவலை வந்துவிட்டது. ‘ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்?’ என்று கேட்கும் இவரால், ‘கன்னிமேரிக்கு கர்த்தர் எப்படிப் பிறந்தார்’ என்று கேட்க முடியுமா? கருணாநிதி, இந்துக்களை இழிவுபடுத்துவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால், கவர்னரிடம் அனுமதி வாங்கி அவர்மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்றவரிடம், ‘ராவணன் பிராமணன் என்று சொல்லியிருக்கிறீர்களே?’ என்றோம்.
‘‘ராமாயணத்திலேயே ராமன் சத்திரியன் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ராம சேது பாலத்தை அமைத்த ராமன் தன் குருவான வசிஷ்டரிடம், ‘யாரைக்கொண்டு ராம சேதுவைத் திறக்க யாகம் நடத்தலாம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ‘அந்தப் பகுதியில் யாகம் செய்யத் தகுதியான பிராமணன், ராவணன் மட்டுமே. அவனை அழைத்து யாகம் நடத்துங்கள்’ என்று வசிஷ்டர் அறி-வுறுத்த, ராமனும் ராவணனை அழைத்திருக்கிறான். ராவணனும் யாக பூஜையில் கலந்துகொண்டான். அதனால் இனி, திராவிடக் கட்சிகள் சத்திரியனான ராமனுக்கு விழா எடுக்குமா?’’ என்றார்



அ.தி.மு.க. எம்.எல்.ஏ வான எஸ்.வி. சேகர் :



‘‘முதல்வர் கருணாநிதி சொல்வது போல ராமர் கற்பனைப் பாத்திரம் என்றால் முருகர், விநாயகர் எல்லாமே கற்பனைதானே. கடவுளே கற்பனை என்று சொல்லும்போது உண்டியல் காசு மட்டும் அரசுக்கு எதற்கு? அறநிலையத்துறை எதற்கு? கோயில்களை மத நம்பிக்கை உடையவர்கள் நடத்திக்கொள்ளட்டும். மூடநம்பிக்கை என்று கேலி பேசும் கருணாநிதி, அறநிலையத்துறை அலுவலகத்துக்குப் பூட்டுப் போடுவாரா?’’ என்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ&வான எஸ்.வி. சேகர் ஆவேசமாக.



சுட்டது from JuniorVikatan

3 comments:

TBR. JOSPEH said...

ஆணி,

தீனிக்கி தானின்னு தெலுங்குல சொல்வாங்க.

மு.கவோட கேள்விக்கு எஸ்.வி.எஸ். கிண்டலா கேட்டுருக்கறதுல தப்பு இல்ல.

சரியான போட்டி:-)

Aani Pidunganum said...

Vaanga joseph sir,

Rombha naal kazhichu paakraen, though unga enkathaiulagam padichundurukaen, rombha nandri sarvaal. As u said Veerapa stylela sollalaam hahahahaha சரியான போட்டி

Geetha Sambasivam said...

nalla sudaringa! ithuvavathu ozunga varuthe! :P :P :P
ithile ennai vanthu ungalukku vayasu ayiduchunu mirattal! grrrrrrrr