Friday, 26 October 2007
அம்பு குறி இட்ட இடத்தை பார்க்கவும்!
Wednesday, 24 October 2007
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
உண்மை என்னன்னா... இது விவசாயத்தோடு சம்பந்தப்பட்டது. வாழை பயிரிடுவதற்கு தகுந்த காலமா, ஆடி மாசத்தைச் சொல்வோம். ஆடிப் பட்டம் தேடி விதைனு சொல்வாங்களே! அப்ப அடிக்கற காத்தை ஆடிக் காத்துன்னு சொல்வாங்க. அதையே இன்னொரு விதமா& தென்மேற்குப் பருவக் காத்துனும் சொல்வோம். இந்தக் காத்து ஒழுங்கா வீசினால், நாடு வளமா இருக்கும். இது முறையா வீசுதா இல்லையானு நமக்கு எப்படித் தெரியும்? ஆடிக் காத்து ஒழுங்கா வீசுனா, வாழை மரம் வடக்குப் பார்த்துத் தார் போடும். அதை வெச்சு ஆடிக் காத்து நல்லா வீசுது; பயிர் பச்சையெல்லாம் நல்லா விளையும்னு தெரிஞ்சுக்கலாம். அப்படி இல்லாம வாழை மரம் வேற திசையில் தார் போட்டுச்சுனா, ஆடிக் காத்து சரியா அடிக்கலை; பயிர் பச்சைங்க ஒழுங்கா விளையாது, உணவுப் பண்டங்களுக்குத் திண்டாட்டம்னு தெரிஞ்சுக்கலாம்.
ஆக, வாழைத் தார் விஷயம்& விவசாயத்துக்காகச் சொல்லப்பட்டது. இதைச் சொல்லி வெச்ச பாட்டன், பூட்டனை எல்லாம் நிக்க வெச்சு, சுத்தி வந்து தரையில விழுந்து நாம நமஸ்காரம் செய்யணும். ஆனால், நாம உண்மை தெரியாம இந்த விஷயத்தை வீட்டோட தொடர்புபடுத்தி, நாமும் குழம்பி அடுத்தவங்களையும் குழப்பறோம்.
பொதுவா, வெடிச்சுப் பரவும் விதைகள் கடினமா இருக்கும். ஆனால், ஆமணக்கு விதைகள் இளகின தன்மை கொண்டதா இருக்கும். வெயில் ஏற ஏற, முற்றிய ஆமணக்குக் காய்கள்லாம் வெடிச்சு, விதைகள் இறைஞ்சு கெடக்கும்.
விஷத் தன்மையோட பளபளப்பா இருக்கற அந்த விதைகளை, குழந்தைகள் எடுத்து வாயில போட்டா, என்னாகும்? விபரீதம்தான்! அதனால இதை வீட்டுத் தோட்டத்துல வளர்க்கக் கூடாதுனு சொன்னாங்க! சரி, வாங்க... அடுத்த கேள்வியைப் பார்க்கலாம்!
‘‘அடுத்த கேள்வியும் சூப்பர்! ‘உச்சி வேளையில கிணத்துக்குள்ள எட்டிப் பார்க்கக் கூடாது. பார்த்தால், பேய் அடிச்சு கிணத்துக்குள்ள தள்ளிடும்னு, ஊர்ப் பக்கம் சொல்றாங்களே... அது உண்மையா?’ங்கிறது கேள்வி.
கெணறுகள்ல அதுவும் நாம உபயோகப்படுத்தாத கெணறுகள்ள விஷ வாயுங்கற நச்சுக்காத்து உருவாகும் வாய்ப்பு உண்டு. உச்சி வெயில் நேரத்துல, சூரியக் கதிர்கள் நேரா கெணத்துல பாயும். சூடுபட்ட பால் பொங்கற மாதிரி, சூரியச் சூட்டுல, கெணத்துல இருக்கற விஷ வாயு பொங்கி மேலே வரும். அப்ப நாம கெணத்துக்குள்ளே எட்டிப் பார்த்தோம்னா விஷ வாயு தாக்கி, நாம அப்படியே அந்தக் கெணத்துக்குள்ள விழ வேண்டியதுதான்! இந்த மாதிரி விஷ வாயு தாக்கி இப்படி நடந்துச்சுனு அடிக்கடி செய்தித் தாள்கள்ல படிச்சிருப்பீங்களே...
Sunday, 21 October 2007
நாட்டின் முக்கிய இடை தேர்தல்
வெற்றி பெற்றது யார் தெரியுமா? அசின். நாற்பத்திரண்டு சதவிகித ஓட்டுக்கள்.
புரிந்திருக்குமே. நாம் நடத்தியது அரசியல் இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பு அல்ல. நடிகைகளின் இடை களைப் பற்றிய கருத்துக் கணிப்பு.
எங்கிருந்து சார் உங்களுக்கு இந்த மாதிரி ஐடியாவெல்லாம் வருது. இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பீங்களா? என்று கேட்ட கடற்கரை பஞ்சு மிட்டாய் வியாபாரி முத்துவுக்குப் பிடித்த இடை நமீதாவுடையதாம். வெட்கமாய்ச் சிரிக்கிறார்.
அசினுக்கு அடுத்து இடையில் ரசிகர்களை இழுத்திருப்பது ஸ்ரேயா. இருபத்துநான்கு சதவிகிதத்தினர். மூன்றாவது இடம் நயன்தாராவுக்கு, இருபது சதவிகிதம். நான்காவது இடத்துக்கு த்ரிஷா வந்து விடுகிறார். ஒன்பது சதவிகிதம் ஓட்டுக்கள். மிச்சமிருக்கும் ஓட்டுக்களை இரண்டு பேர் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் நமீதாவும், சினேகாவும். கருத்துக்கணிப்பில் பல இளைஞர்கள் ஸ்ரேயாவைக் குறிப்பிட்டாலும் ஓட்டுப் போடும்போது அசினுக்குப் போடுகிறார்கள்.
அசின் அம்சமான அழகு சார். மாத்திப்போட மனசில்லை என்று சொல்கிறார், திருவல்லிக்கேணியில் தங்கியிருக்கும் பிரம்மச்சாரி வேல். இப்படி அசினுக்கு நிறைய சப்போர்ட்.
ரொம்ப ஒல்லியாய் இருப்பதாலோ என்னவோ த்ரிஷாவுக்கு ஓட்டுக்கள் அதிகம் விழவில்லை. அதேபோல் சினேகாவுக்கும்.
சினேகாவும் த்ரிஷாவும் ரொம்ப அழகு சார். ஆனால் இடைனு வரும்போது அவங்களைச் சொல்ல முடியலை என்கிறார், மயிலாப்பூரிலிருக்கும் இளம் குடும்பத்தலைவி சௌம்யா.
கல்லூரி மாணவர்களுக்கு நமீதாவின் இடை பிடித்திருக்கிறது. கல்லூரி மாணவிகளுக்கு த்ரிஷாவைப் பிடித் திருக்கிறது. ஆனால் மொத்த ஓட்டுக்களில் முந்தியது அசின்தான்.
கவர்ச்சியும் இருக்கிறது. குடும்பப் பெண் லுக்கும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படியொரு நடிகையைப் பார்ப்பது அரிது என்று மனம் மகிழ்ந்து சொல்கிறார் புகழேந்தி. ஆட்டோ மொபைல் வொர்க் ஷாப் வைத்திருக்கிறார்.
இந்தக் கருத்துக் கணிப்பில் ஒரு ஆச்சர்யம் இருக்கிறது. நம்மிடம் பேசிய எல்லோரும் மறக்காமல் ஒரு நடிகையைக் குறிப்பிட்டார்கள்.
என்ன இருந்தாலும் அவங்களோட இடையைப் போல் வராது. நடனமாடும் போது எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா? என்பதுதான் பலரது கமெண்ட்.
அந்த நடிகை. சிம்ரன்!.
குமுதம்.com
Monday, 15 October 2007
ராமதாஸ், கருணாநிதி, ஜெயலலிதா - துணுக்ஸ்
– கருணாநிதி
பயங்கரமாக இருக்கிறதே! இப்படி கட்டிடம் கட்டுவதற்கு, எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பொறியாளராக வேண்டும்?
தி.மு.க. அரசைக் கவிழ்க்க வேண்டும் என்று சொல்ல, ஜெயலலிதாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
– ராமதாஸ்
தனக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது என்று நினைக்கிறாரா?
விஜயகாந்த் கட்சியில் சேருபவர்கள் எல்லாம் கழிசடைகள்.
– எம்.ஆர்.கே.
பன்னீர்செல்வம் அதனால் என்ன? அவர்கள் கட்சி மாறி தி.மு.க.வில் சேர முன்வந்தால், "நீங்கள் இருக்க வேண்டிய இடமே இதுதான்' என்று கூறி கலைஞர் பாசத்துடன் சேர்த்துக்கொள்ள மாட்டாரா என்ன?
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலரும்போது, நிச்சயமாக திருப்பூர் குமரன் பற்றிய திரைப்படம் எடுக்கப்படும்.
– ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இந்த கிண்டல்தானே வேண்டாம் என்பது? படம் எடுக்க இஷ்டமில்லையென்றால் நேரடியாகச் சொல்லலாமே?
கல்விக் கொள்ளைகள் தொடர்பாக, தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன...? – ராமதாஸ்
"எதற்கும் ஒரு எல்லை உண்டு' என்று முதல்வர் அப்போதே எச்சரித்துவிட்டாரே! அது நடவடிக்கை இல்லையா?
துக்ளக்
Thursday, 11 October 2007
Tuesday, 9 October 2007
புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.........
முதலில் எதிர்ப்பட்ட ஐன்ஸ்டீனிடம்.....”நீங்கள்தான் உண்மையான ஐன்ஸ்டீன் என்பதை எப்படி நம்புவது? நிரூபித்துக் காட்டுங்கள்’’ என்று கூற....
”எனக்கொரு கரும்பலகையையும், சாக்பீசையும் கொடுங்கள். நிரூபித்துக் காட்டுகிறேன்’’ என்றார் ஐன்ஸ்டீன். இரண்டும் கொடுக்கப்பட்டது.
ஆற்றல்....நிறை....என ஏதேதோ கணக்குப் போட்டு தான் கண்டுபிடித்த E-MC2 என்கிற ஃபார்முலாவை நிரூபித்துக் காட்ட.... “அட...நீங்க உண்மையிலேயே ஐன்ஸ்டீன் தான். உள்ளே போங்கள்’’ என்று வழிவிட்டார் கடவுளின் ஏஜெண்ட்.
அடுத்து வந்தவரோ உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காஸோ. அவரையும் நிரூபித்துக் காட்டச் சொல்ல... பிக்காஸோ கரும்பலகையில் முன்னர் ஐன்ஸ்டீன் எழுதியிருந்த சூத்திரத்தை அழித்துவிட்டு வரையத் தொடங்கினார். அவர் வரைந்த அற்புதமான ஓவியங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சிப் பெருக்கில் அப்படியே கட்டித் தழுவி.... ”நீங்க மாபெரும் கலைஞர் பிக்காஸோதான். நம்புகிறேன். உள்ளே போங்கள்’’ என்று வழி விட்டார் கடவுளின் ஏஜெண்ட்.
அடுத்து வந்து நின்றவர் மற்றவர்களைப் போல் இல்லை. அவர் ஒரு மகா மேதை.
ஆனால் அவரோ காவலுக்கு நின்றவரைத் தள்ளிவிட்டுவிட்டு உள்ளே போக முயற்சிக்க....
“முதலில் நீங்கள் யாரென்று சொல்லி நிரூபியுங்கள். அப்புறம் அனுமதிக்கிறேன்’’ என்று கடவுள் ஏஜெண்ட் கடுப்புடன் கூற....
“நான் தான் ஜார்ஜ் புஷ்’’ என்றார் புஷ்.
“சரி நீங்கள் தான் ஜார்ஜ் புஷ் என்பதை எப்படி நம்புவது? உங்கள் அறிவுத் திறமையால் உங்களை நிரூபித்துக் காட்டுங்கள்’’ என்றார் க.ஏ.
“எப்படி நிரூபிப்பது?’’ என்று மீண்டும் புஷ் கேட்க...
“உங்களுக்கு முன்பு வந்த ஐன்ஸ்டீனும்....பிக்காஸோவும் எப்படி நிரூபித்தார்களோ அப்படி’’ என்றார் கடவுளின் ஏஜெண்ட்.
“அது சரி, யார் அந்த ஐன்ஸ்டீனும்.....பிக்காஸோவும்?’’ என்றார் ஜார்ஜ் புஷ்.
“இம்புட்டு “அறிவு’’ இருக்குன்னா....சந்தேகமேயில்லை நீங்க ஜார்ஜ் புஷ்ஷேதான். உள்ளே போங்கள்’’ என்று கதவுகளை அகலத் திறந்துவிட்டபடி வெளியில் குதித்தோடினார் கடவுளின் ஏஜெண்ட்.
குமுதம்.com
மல மல மல மலைக்கோட்டை
திரையில் ஹீரோ, வில்லன்களை அடிஅடியென்று அடித்துக்கொண்டிருக்கும்போது எப்போது அவர் அடித்து முடிப்பார், வீட்டுக்கு கிளம்பலாம் என்பது இன்னொரு ரகம்.
Sunday, 7 October 2007
Friday, 5 October 2007
அமெரிக்காவில் ஒரு பகுத்தறிவாளர் ! – எஸ். குருமூர்த்தி
அமெரிக்காவின் ஒரு "பகுத்தறிவாளர்' செய்திகளில் வெளிப்பட்டார். அவருடைய பெயர் ஸ்டீவ் பிட்டர்மேன். அவர் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஒன்றான ஐயோவா மாநிலத்தில் உள்ள, "ரெட் வோக்' என்கிற குட்டி நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியர். அந்தக் கல்லூரி அரசு உதவியுடன் நடக்கும் கல்விக் கூடம்.
ஈரோடில் கருணாநிதி கீமாயணம் துவங்கிய மூன்றாம் நாள் – செப்டம்பர் 18ஆம் தேதி – பிட்டர்மேன் தன்னுடைய மாணவர்களுக்காக மேற்கத்திய கலாச்சாரம் பற்றிய வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பு முடிந்த பிறகு மாணவர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவனிடம் அவர் பைபிளின் முதல் பகுதியான பழைய ஏற்பாட்டில் இடம் பெறும், முதல் ஆண் – பெண் ஜோடியான ஆதம் ஏவாள் பற்றி குறிப்பிட்டு, ""இந்த ஜோடி பற்றிய பைபிள் கதையை அப்படியே நம்பிவிடக் கூடாது'' என்று கூறினார். இந்தப் பேச்சு, தன்னுடைய மதத்தை இழிவுபடுத்துவதாகும் – எனக் கூறி, "நான் உடனேயே வக்கீலிடம் சென்று உங்கள் மேல் வழக்குத் தொடர வழி செய்கிறேன்' என்று அவரை எச்சரித்தான் அந்த மாணவன்.
அவருடைய இந்த விளக்கம் ஐயோவா மாநில டெலிவிஷன் இணைப்பு மூலமாக, இதர மாணவர்களுக்கும் ஒளிபரப்பப்பட்டதால், மேலும் பல மாணவர்களும் "தங்கள் மத உணர்வுகளை அந்தப் பேராசிரியர் இழிவு செய்தால், அவருக்கு எதிராக வழக்கு தொடர்வோம்' என்று குரல் கொடுத்தனர்.
ஆதம்ஏவாள் கதை ஒரு கற்பனை என்று கூட அவர் கூறவில்லை; அவர் பைபிளின் "பழைய ஏற்பாட்டை' மத அடிப்படையில் இல்லாமல், கல்வி முறையில் விளக்கினார் என்று செய்திகள் கூறுகின்றன. பகுத்தறிவாளர் ஸ்டீவ் பிட்டர்மேன் இப்படி பேசிய 48 மணி நேரத்துக்குள் டெலிஃபோன் மூலமாக பேராசிரியர் பதவியிலிருந்து "டிஸ்மிஸ்' செய்யப்படுகிறார். அந்தக் கல்லூரியின் கல்வித்துறை துணை முதல்வர் லிண்டா வைலட், அவருக்கு டெலிஃபோன் செய்து பதவியிலிருந்து "கல்தா' கொடுக்கிறார்.
"இப்படிப்பட்ட புகழ்பெற்ற, அரசு நடத்தும் சமுதாயக் கல்லூரியிலா, இதுபோன்ற நியாயமற்ற கேட்பாரற்ற நடவடிக்கை? என்று ஆடிப் போய்விட்டார், அமெரிக்காவின் பகுத்தறிவாளர். அரசியல் சாசனத்தில் பேச்சுரிமைக்குப் பெயர் போன நாடாயிற்றே அமெரிக்கா! அங்கு எப்படி இப்படி... என்று அந்தக் கல்லூரியின் அதிகாரிகளிடம் பத்திரிகையாளர் கேட்டபோது, அவர் கொடுத்த ஒரு வரி இதுதான். ""நாங்கள் செய்தது – பிட்டர்மேனை டிஸ்மிஸ் செய்தது – பேச்சு சுதந்திரத்திற்கு விரோதமானதல்ல. அதற்கு அர்த்தம், பிட்டர்மேன்தான் பேச்சுரிமை வரம்புகளை மீறி பேசியிருக்கிறார்''.
""எப்படி அந்தப் பேராசிரியரை பதவி நீக்கம் செய்யலாம்? பைபிள் ஒரு கட்டுக்கதை. ஆதம்ஏவாள் ஒரு கற்பனை என்பது எல்லா கல்வியாளர்களும் ஒப்புக்கொண்ட விஷயமாயிற்றே'' – என்று கூறி பிட்டர்மேனுக்கு அத்திப்பூத்தாற் போல ஒரு நாத்திகவாதி – ஹெக்டர் அவலோஸ் – மட்டுமே வக்காலத்து வாங்குகிறார். ""அப்படியானால் உலகம் ஆறு நாட்களில் உருவாக்கப்பட்டது என்று பைபிள் கூறுவதை நம்ப வேண்டுமா?'' என்று கேட்கிறார் அவலோஸ். இவர்களுடைய பகுத்தறிவு வாதத்தை அந்த முற்போக்கு சமுதாயத்தில் யாரும் சட்டை செய்யவேயில்லை.
தனிப்பட்ட முறையில் மக்களுடைய மதஉணர்வுகளைப் புண்படுத்திய பிட்டர்மேன், பேராசிரியர் பதவிக்கு லாயக்கில்லாதவர். ஆனால் இங்கு பொதுமேடையிலும், டெலிவிஷனிலும் ஸ்ரீராமரை கட்டுக்கதை என்று கூறியது மட்டுமல்லாமல், "ராமன் குடிகாரன்' என்று கீழ்த்தரமாக வசைபாடிய கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியில் தொடர்கிறார். அவர் தன்னை "கருணாநிதி' என்று யாராவது கூறினாலே தனக்கு மரியாதைக் குறைவு – என்று நினைக்கும் அளவுக்கு புண்படும் மென்மையான மனம் படைத்தவர்.
ஆனால் பிறர் உணர்வுகள் புண்படுவது பற்றி அவருக்குக் கவலையோ வருத்தமோ கிடையாது. மேலும் இப்படி அவர் தன்னை முற்போக்குவாதி, மதச்சார்பற்றவர், சிறுபான்மையினரின் காவலர், பகுத்தறிவாளர் என்றும் பிரபலப்படுத்திக் கொண்டிருப்பவர். இப்படிப்பட்ட கருணாநிதியையும் அமெரிக்காவின் ஸ்டீவ் பிட்டர்மேனையும் ஒப்பிடும்போது, ஒரு விபரீதமான கற்பனை எழத்தான் செய்கிறது. நம் கருணாநிதி அமெரிக்காவில் பிறந்து, அந்தப் பேராசிரியர் போல பகுத்தறிவு பாடம் நடத்தியிருந்தால், ஸ்டீவ் பிட்டர்மேனுக்கு நேர்ந்த கதிதானே அவருக்கும்? அதுபோல இவருக்கு இங்கு நடக்காததற்குக் கருணாநிதியே கூறியது போல, நம் நாட்டு மக்கள், குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள், மூடர்களாகவும், மௌடீகர்களாகவும் இருப்பதுதான் காரணமா?
பின்குறிப்பு: அமெரிக்க பேராசிரியர் ஸ்டீவ் பிட்டர்மேன் பற்றிய விவரங்களை மேலும் அறிய http://foxnews.com/story/0,2933,297847,00.html என்கிற இணைய தளத்தைப் பார்க்கவும். அதற்கு மேலும் விவரம் வேண்டுபவர்கள் இந்தச் செய்தியை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் "மேகன் ஹாக்கின்ஸ்' அவர்களை, 0015152848169 என்கிற தொலைபேசியிலோ அல்லது mehawkins@dmreg.com என்கிற ஈமெயில் விலாசத்திலோ தொடர்பு கொள்ளலாம்.
சுட்டது துக்ளக்
கதம்பமா சுட்டது
கே : "இனி யாருக்கும் லட்சிய தி.முக. பல்லக்குத் தூக்காது' – என்ற விஜய் டி. ராஜேந்தரின் திடீர் முழக்கம் பற்றி?
ப : சரி, கட்சிக்கு ஏதாவது வேலை இருக்க வேண்டாமா? அதற்கு என்ன செய்யப்போகிறார்?
ப : அந்த வேலையும் இல்லை என்றால், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் என்னதான் செய்வது? எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சிற்குப் போக வேண்டியதுதானா?
அதெல்லாம் அந்தக் காலம் ஸார். இப்போது கௌன்சிலர்களே அந்த அதிசயத்தை நிகழ்த்த முடியுமே!
தமிழக அரசின் மின்துறை அமைச்சரின் பெயர் ஆற்காடு என். வீராசாமி என்றுதான் இருந்தது – இதுவரை. அது ஆற்காடு என். வீராஸ்வாமி என்று இனி மாற்றப்படும் என்று கெஸட் செய்தி கூறுகிறது.
இரண்டு கேள்விகள் :
1. சாமி என்ற தமிழ்ப் பெயரை "ஸ்வாமி' என்ற வடமொழிப் பெயராக மாற்றுவது (தி.மு.க. கொள்கைப்படி) சரிதானா?
2. இது நியூமராலஜி சாத்திரத்துக்காகச் செய்யப்பட்ட மாறுதல் என்பது வெளிப்படை. இந்த "மூடநம்பிக்கை' பற்றித் தி.க. தலைவர் கி. வீரமணி என்ன கூறுகிறார்?
ப : அவர் இப்படித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். சாட்டையால் அடிப்பேன், பூட்டுப் போடுவேன்... என்றெல்லாம் சொன்ன மாதிரி இதுவும் ஒரு பூச்சாண்டி. அவ்வளவுதான். பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
சுட்டது துக்ளக்
Monday, 1 October 2007
2011_ல் ஏகப்பட்ட பேர் தமிழ்நாட்டுல முதலமைச்சர்!
அய்யய்யோ.... 2011_ல் ஏகப்பட்ட பேர் தமிழ்நாட்டுல முதலமைச்சர் ஆயிருவாங்க போலிருக்கே’’ என்று அலறியபடி வந்தார் ‘சட்ட சிக்கல்’ சிவா.
“ரொம்ப உணர்ச்சிவசப்பட வேண்டாம்....பொறுங்க...’’ என்று அவரை ஆறுதல் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது நண்பர்கள் வட்டத்திற்கு.
“பின்ன என்னங்க.....
‘2011 ல் நான் தான் முதலமைச்சர்’ என்கிறார் அ.இ.ச.ம.க சரத்குமார்......
‘தி.மு.க., அ.தி.மு.க.வை மண்ணைக் கவ்வ வைத்து நான்தான் முதல்வராகப் போகிறேன்’ என்கிறார் தே.மு.தி.க விஜயகாந்த்......
‘எத்தன கட்சி, இருந்தாலும் மச்சி, அவங்கெல்லாம் குச்சி, ஊர்வாயத் தச்சி, குடுக்கப்போறேன் பச்சி’ என அடித்துச் சத்தியம் செய்கிறார் ல.தி.மு.க விஜய டி.ராஜேந்தர்.
என்னாகப் போகுதோ தமிழ்நாடு? என்று புலம்ப ஆரம்பித்து விட்டார் ‘மறதி’ மயில்வண்ணன்.
“வேணும்ன்னா ஒண்ணு பண்ணலாம்... முதல் ஆறு மாதம் சரத்குமார்... அடுத்த ஆறு மாதம் விஜயகாந்த்.... அடுத்தது ராஜேந்தர்....ன்னுமாத்தி மாத்தி ஆட்சி நடத்தச் சொல்லலாம்.....’’ என்று டேட்டா தங்கவேலு ஆசி வழங்க....
“சரி அப்ப நம்ம கார்த்திக்க எப்ப முதல்வராக்கறது?” என்று முந்திரிக் கொட்டையாய் மூக்கை நுழைத்தார் ‘பேக்வேர்டு ஒயிட்’ பாண்டியன்.
“அட... அவரையும் சுழற்சி முறைல ஆக்கிடலாம்..... இப்ப அதில்ல பிரச்னை.... இவுங்க எல்லாம் முதலமைச்சர் சரி...ஆனா அமைச்சரவைல யார் யாரப் போடறது?” என்கிற முக்கியமான பிரச்னையைக் கிளப்பி விட்டார் ‘அகோரப்பசி’ கு.செயக்குமார்.
அவ்வளவுதான், நண்பர்கள் வட்டமே கலகலத்து விட்டது. குளிர் காலக் கூட்டத் தொடர் போல மணிக்கணக்கில் அலசி ஆராய்ந்து ஒரு அமைச்சரவை பட்டியலினையே தயாரித்துத் தந்து விட்டார்கள்.
அதைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழாதது ஒன்றுதான் மிச்சம். இதோ 2011_ல் அமையப் போகும் புதிய அமைச்சரவை:
தமிழக கல்வி அமைச்சர்: மாண்புமிகு.சிம்பு (என்கிற) சிலம்பரசன்.
பொதுப்பணித்துறை அமைச்சர்: மாண்புமிகு. நமீதா.
சமூக நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு. எஸ்.ஜே.சூர்யா.
நிதி அமைச்சர்:மாண்புமிகு. நயன்தாரா
ராணுவ அமைச்சர்: மாண்புமிகு.அர்ஜுன்.
அறநிலையத் துறை அமைச்சர்: மாண்புமிகு. சொர்ணமால்யா.
மின்சார அமைச்சர்: மாண்புமிகு.மணிரத்னம்.
தொழில் துறை அமைச்சர்: மாண்புமிகு. விஜயகுமார்.
தேர்தல் முடிவுகள் வெளிவர வெளிவரவே தமிழகத்தைத் தனியாக பிரித்துக் கொடுத்து விடுவார்கள் என்பதால், ராணுவ அமைச்சகம் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. காமராஜர் காலத்திற்குப் பிறகு சிக்கனமாக அமையப் போகும் இந்த அமைச்சரவையின் ஆயுளை மனதில் கொண்டு மேலே சிலருக்குக் கொடுக்கப்பட இருந்த பால்வளத் துறை மட்டும் முதலமைச்சர் வசமே இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.
எல்லாம் ஓ.கே...ஆனால்...இந்த சட்டமன்றம்...எம்.எல்.ஏ.ஹாஸ்டல் இதையெல்லாம் இடம் மாத்தனுமே என்றேன்.....
“எங்கே?’’ என்றார்கள் நண்பர்கள் கோரசாக.
சேப்பாக்கத்திலிருந்து....கீழ்ப்பாக்கத்திற்கு. என்றதுதான் தாமதம்.....
“அப்ப அங்கிருக்கவங்க எல்லாம் எங்கே போறதாம்?” என்றது ‘மறதி’ மயில்.
அவங்க மட்டுமில்ல.... ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் குடி போறதுக்கு இப்ப இருக்கறதை விட நல்ல வசதியான அற்புதமான இடம் ஒண்ணு இருக்கு....என்றவனிடம்,
“எங்கே என்று சீக்கிரம் சொல்லித் தொலை’’ என்றது மொத்த நண்பர்கள் வட்டமும்.
“வேறெங்கே.....வங்காள விரிகுடா கடல்தான்......’’ என்றபடி
எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்.......
சுட்டது குமுதம்.comராஜயோகம் செய்தி இதுதானா?
செய்தி இதுதான் : ரஷ்யாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து விட்டதாம். இந்த நிலை நீடித்தால் அங்கு ஆட்களே இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டி வந்துவிடுமாம். அதனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு என்றே ஆண்களை இறக்குமதி செய்யலாம் என்று ஒரு புரட்சிகரமான யோசனையைத் தெரிவித்திருக்கிறார் மரியா என்கிற பெண்ணியவாதி.
அதிலும் “மற்ற நாட்டு ஆண்களைவிடவும் இந்திய ஆண்கள்தான் ‘இலட்சியக் கணவர்களாக’ இருப்பார்கள்...
உலகமே இடிந்து விழுந்தாலும் ‘காரியமே கண்ணாக’ இருப்பவர்கள் இந்திய ஆண்கள்தான்...’’ என்று அடித்துச் சொல்கிறார் இந்த மரியா தனது ஜிணீstவீஸீரீ மிஸீபீவீணீ என்கிற புத்தகத்தில்.
இந்த “உற்பத்தி’’ விஷயத்தில் மட்டும் கவலையே படவேண்டாம் ரஷ்யர்கள். ‘ம்‘ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்....’நீ’... ’நான்’...என்று ஆளாளுக்கு ரயிலேறி அடச்சே.....விமானமேறி விடுவார்கள் நம்மவர்கள்.
என்ன... இதில் ஒரே ஒரு பிரச்னைதான்.... “கிளைமேக்ஸில்’’ ஏதாவது சிக்கல் என்றால் ‘ஊக்குவிப்பதற்கு’ சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமாரையோ... டாக்டர். ஷர்மிளாவையோ..... அல்லது நாராயணரெட்டியையோ உடன் அனுப்பி வைக்க வேண்டியிருக்கும். அவ்வளவுதான்.
இது ஒரு புறமிருக்க.... இப்போது இரண்டுக்கு மேல் பிள்ளை பெறுபவர்களுக்கு பத்தாயிரம் டாலர் பரிசளிக்க முடிவு செய்திருக்கிறது ரஷ்ய அரசு. பத்துக்கு மேல் பிள்ளை பெறுபவர்களுக்கு “வீரத்தாய்” பட்டமும் கொடுத்து....ஒரு வீர வாளையும் பரிசாகக் கொடுக்கலாம் அவர்கள்.
இதன் உச்சகட்டமாக..... “நீங்கள் இதுவரை தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்கியது போதும்....இனி நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப் (கவனிக்க: அவரவர் வீட்டுக்கு) படையெடுத்துப் போய் “அந்த” உற்பத்தியைப் பெருக்குங்கள்’’ என்று அறிவித்ததோடு செப்டெம்பர் 12 அன்று விடுமுறையும் விட்டிருக்கிறது அரசு.
அதுசரி, எதற்காக செப்டம்பர் 12_ஐ “உற்பத்திக்கான” நாளாக தேர்ந்தெடுத்தார்களாம்? அதில்தான் இருக்கிறது ரஷ்யர்களின் தேசபக்தி.
செப்டம்பர் 12_ல் செயலில் சுறுசுறுப்பாக இறங்குபவர்களுக்கு.....
இலக்கும் சரியாக அமைந்து.... கணக்கும் சரியாக அமைந்துவிட்டால்..... சரியாக அடுத்த ஜூன் 12_ல் குவா...குவாதான். ஏனென்றால், ஜூன் 12 தான் ரஷ்யாவின் தேசிய தினம்.
இத எப்படி எடுத்துகறதுனு எனக்கு தெரியல, உங்களுக்கு?
சுட்டது குமுதம்.com