சாமியார்கள் எத்தனை ரகமான கூத்து பண்ணி னாலும் சலிக்காமல் ரசிக்கிற வாசக மகா ஜனங்களுக்கு லேட்டஸ்ட் அறிமுகம் & பண்ணாரி சாமியார்!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து ராசி புரம் செல்லும் வழியில் வையப்பமலை பஸ் ஸ்டாப்பில் இறங்கி தெற்கே ஐந்து கிலோமீட்டர் தூரம் போனால் வரும் கிராமம் பெரியமணலி. இங்குதான் பிரமாண்ட ஆசிரமம் கட்டி Ôஅருள்Õ பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீலஸ்ரீ பண்ணாரி சாமியார்.
பல வருடங்களாக முடி வெட்டாமலும் எண்ணெய் வைக்காததாலும் சிடுக்கு பிடித்த நீண்ட ஜடா££... முடி! உடம்பு முழுக்க அழுத்த்த்தமான விபூதிப் பட்டை... கழுத்தை மறைத்து ருத்ராட்சக் கொட்டை... இடுப்பில் காவி வேட்டி... அதில் முடியப்பட்ட செல்போன்... இதுதான் ஸ்ரீலஸ்ரீ பண்ணாரி சாமியாரின் திருக்கோலம்.
நாம் அவரது ஆசிரமத்துக்குச் சென்றி ருந்த நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த பக்தர் ஒருவருக்கு அருள் வாக்கு சொல்லிக்கொண்டிருந்தார் சாமியார். ‘‘அடுத்தவனைப் பார்த்துப் பார்த்தே உம் பொழப்பு நாசமாப் போயிட்டிருக்கு. அடுத்தவனைப் பார்க்குறதை நிறுத்திட்டு நீ பொழைக்கிற வழியைப் பாருடா. உனக்கு அடிக் கடி மூட்டு வலி வருமே, ரைட்டா? அதுக்கு ஒரு மருந்து தர்றேன். தெனமும் மூணுவேளை மூணு நாளைக்கு சாப்பிடு. அப்புறம் எந்த வலியும் உனக்கு வராது’’ என்று பொள்ளாச்சி பார்ட்டிக்கு அருள்வாக்கு பிளஸ் மூட்டுவலி மருந்துக்கு ஃபீஸ் ஐந்தாயிரம் வாங்கிக்கொண்டார்.
நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். ‘‘உங்க பத்திரிகை எவ்வளவு
விற்கும்..? எந்த ஊருக்கெல்லாம் போகுது..?’’ என்று சர்வே ரேஞ்சுக்கு விவரம் கேட்டுக்கொண்ட பிறகே திருவாய் திறந்தார் பண்ணாரி.
‘‘மல்லசமுத்திரம் பக்கம் இருக்கிற சின்னகாளிப்பட்டிதான் என் சொந்த ஊர். வீட்டுல வச்ச பேரு நல்லதம்பி...ÕÕ என்று ஆரம்பித்து தன் பூர்வ கதை சொல்லிவிட்டு, ‘‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி உலகத்துல இருக்குற மக்கள் எல்லாம் நல்லா இருக்கணும்னு பனை மரத்து மேல ஏறி உட்கார்ந்து நூத்திப் பதினோரு நாள் தவமிருந்தேன். அந்த சமயத்துல என் சாப்பாடு கடலைக் கொட்டை மட்டும் தான். அதுவும் என்னோட பக்தர்கள் கீழே இருந்து கயித்துல கட்டிவிடுவாங்க. நான் மேலே இருந்து இழுத் துக்குவேன். பூமியை தோண்டி அதுக்குள்ளயும் உட்கார்ந்து தவமிருந் துட்டேன். என்னோட தவத்தாலதான் இன்னைக்கு உலகத்துல பெரிய அளவுல சண்டை சச்சரவு இல்லாம அமைதியா மக்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க என்று இன்றைய பராக்கிரமÕங்களை உதிர்த்தார். [அள்ளி விடறாரு]
‘‘நான் பள்ளிக் கூடத்துப் பக்கம் எட்டிக்கூடப் பார்த்தது இல்லை. ஆனா, இன்னைக்கு பல பேருடையை நோயை குணப்படுத்துறேன். டாக்டருங்களே முடியாதுன்னு சொன்ன பலபேரை காப்பாத்திருக்கேன்ÕÕ என்றவர், ÔÔஎய்ட்ஸ்க்கு மருந்து இல்லன்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா நான் கண்டுபிடிச்சிட்டேன். சில மூலிகைகளை ஒண்ணா அரைச்சு (அதைச் சொல்வாரா என்ன?) ஒரு தைலம் ரெடி பண்ணியிருக்கேன். அதை தெனமும் மூணு உருண்டை தின்னாப் போதும் எய்ட்ஸ் பறந்துபோயிடும். அதேமாதிரி சில பேருக்கு சீக்கிரமே விந்து வெளியேறிடும். நான் அதுக்கும் மருந்து வச்சிருக்கேன். ஒரு வேளைக்கு பதினைஞ்சு ரூபா ஆகுது. ஒருவாரம் தொடர்ந்து தின்னா போதும். எவ்வளவு நேரமானாலும் தாங்கும்! என்றார் Ôசிட்டுக்குருவிÕ வைத்தியர் ரேஞ்சுக்கு! இந்த பண்ணாரி சாமிக்கும் பக்த வாடிக்கையாளர்கள் அடிக்கடி வந்து போவதில், ஜோராகத்தான் கதை ஓடிக்கொண்டிருக்கிறது! [சாமி இதுக்கே கண்ணக்கட்டுதே]
ஏமாற ஆளிருந்தால்... இதுபோல நன்னாரிகளுக்கா நாட்டில் பஞ்சம்?!
Vikatan.com
2 comments:
hi,
This article reminds me of the "beedi saamiyaar" about whom Vivek would have made fun of in one if his films.I forgot the real name of beedi saamiyaar though!!!
சரி... பனைமரத்து மேல இருந்து நெலக்கடலை தின்னாரு..சரிதான். வெளிக்கு எப்பிடிப் போனாராம்? அதச் சொல்லலையே. பனை மர உச்சீல கக்கூஸ் இருக்குதா என்ன?
இந்த மாதிரி மனநோயாளிகளை மருத்துவமனையில சேர்த்து ஷாக் ட்ரீட்மெண்ட்டு குடுக்கனும். அத விட முக்கியம்...அவங்க கிட்ட போறவங்களுக்குக் குடுக்கனும்.
Post a Comment