DInamalar.com
தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் பேசும் போது, "காங்கிரஸ் கட்சியுடனான உறவில் எந்த சிக்கலும் இல்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் தலையிடும்படி, மத்திய அரசை நாங்கள் நிர்பந்திக்கவில்லை' என கூறினார்.தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து நிருபர்கள் கேட்ட போது, கருணாநிதி கடுமையாக கோபப்பட்டார்.
"சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டதற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது குறித்தெல்லாம் கேட்காமல், கனிமொழி வழக்கை மட்டும் பேசுகிறீர்களே' என எரிந்து விழுந்தார். "காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதே' என கேட்ட போது, "தி.மு.க., தோல்விக்கு பார்ப்பனர்களே காரணம்' என்றார்."மத்திய அரசிலிருந்து விலகினால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சந்திப்பது சிரமமாக இருக்கும் என்பதாலே, மத்திய அரசிலிருந்து விலகவில்லை' என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Seems still he didn't understand the reason why he lost the election... Does he think actually?
1 comment:
My email id:tbr.joseph@gmail.com
Post a Comment