Sunday, 17 August 2014

Memory Power

ஞாபகசக்தி அதிகரிக்க...
வல்லாரை கீரையைச் சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். அதிலுள்ள Asiaticosides,  மூளைச் சோர்வு தராமல் அறிவைத் துலங்கவைக்கும் என்று நவீன அறிவியல் நம் பாரம்பரியப் புரிதலுக்குச் சான்று அளிக்கிறது. கொத்துமல்லி சட்னி அரைப்பதுபோல் கொஞ்சம் மிளகாய் வற்றல், கொஞ்சமாக புளியைச் சேர்த்து சட்னியாக அரைத்து தோசைக்குச் சாப்பிடலாம். வல்லாரை தோசை, வல்லாரை சூப் இன்றைக்கு பாரம்பரிய உணவகங்களில் பிரபல உணவும்கூட.
'பிரமி’ - பாரம்பரிய மருத்துவத்தின் பிரபலமான ஞாபகசக்தி மருந்து. மறதியை நீக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் இதில் உள்ள Baccosides பயன் அளிப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது, நீரோடைப் பக்கம் நிற்பதால் 'நீர்ப் பிரமி’ என்றும் அழைக்கப்படும்.
சித்த மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படும் வாலுளுவை அரிசி எனும் மூலிகையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில், மறதிக்கு மருந்து எடுக்கும் முயற்சி இன்றும் ஆய்வில் உள்ளது. நீதி வழங்கும் முன் அலசி ஆராய(!) அந்தக் கால நீதிபதிகள் இதில் இரண்டு அரிசி எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்களாம்.
 DHA   - ஞாபகமறதி நீக்க பயன்படும் சத்து மீனில் இருந்தும், ஃபிளாக்ஸ் விதையில் இருந்தும் இதை உணவில் அன்றாடம் பெற்றுக்கொள்ள முடியும்.
வல்லாரையோ, பிரமியோ எதுவாக இருந்தாலும் நாம் எடுக்கும் முயற்சியில்தான் பயன் அளிக்குமே தவிர, சுவர் ஏறிக் குதித்து படம் பார்த்துவிட்டு குப்புறப் படுத்துத் தூங்கும் பிள்ளைக்கு, சந்தனக் காப்பு அரைத்துக் குளிப்பாட்டினாலும் எதுவும் நினைவில் நிற்காது!
யோகா அளிக்கும் ஆஹா மெமரி!
தினசரி 20 முதல் 40 நிமிடங்கள் யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள், முதியோருக்கு மறதியைப் போக்கவும், இளைஞர்களுக்கு ஞாபகசக்தியைப் பெருக்கவும் பெரும் அளவில் பயன்படும் என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. யோகாசனப் பயிற்சியும், பிராணாயாமப் பயிற்சியும், வார்த்தைகளைத் தேடும் மறதியை, உருவ மறதியை, கவனச் சிதறலால் ஏற்படும் மறதியை, வார்த்தைகளைச் சரளமாக உச்சரிப்பதை நிர்வகிக்கும் ஆற்றல் குறைவு, பணியில் மந்தம் போன்றவற்றைத் தீர்ப்பதாக Trail Making Test மூலம் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். கூகுளிலோ, பழைய புத்தகக் கடையில் தற்செயலாகப் பார்த்த புத்தகத்திலோ கற்றுக்கொள்ளாமல், யோகாசனப் பயிற்சியில் தேர்ந்த ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்!
Source: Vikatan.com

BP matter

ரத்தக் கொதிப்பைத் தவிர்க்கும்  உணவு வகைகள்!
 முருங்கைக் கீரையை நீர் நிறைய விட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோல செய்து, காலை உணவுடன் பருகலாம்.
மதிய உணவில் சமைக்காத சிறிய வெங்காயத் தயிர் பச்சடி, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி, வெள்ளரிப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம்.
 கொதிப்புக்குக் காரணமாக ரத்தக் கொழுப்பைக் குறைக்க/கரைக்க, புளியை உபயோகத்துக்கு ஏற்ப எடை குறைக்கும் தன்மையுடைய கோக்கம் புளி அல்லது குடம் புளியைப் பயன்படுத்தலாம்.
 வெந்தயத் தூள், கறிவேப்பிலை பொடியை சுடுசோற்றில், முதல் உருண்டையில் பிசைந்து சாப்பிடலாம்.
 பச்சைத் தேநீர் (கிரீன் டீ) ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்தது என்பதால், ரத்தக் கொதிப்பு நோயாளிக்கு வரக்கூடிய மாரடைப்பைத் தடுக்க உதவுமாம்.
 மஞ்சள் தூள், லவங்கப்பட்டை மணம்ஊட்டிகள் இதயம் காக்கும் என வெள்ளைக்கார விஞ்ஞானிகள் இப்போது ஆமோதிக்கிறார்கள்!
வேகவைக்காத சின்ன வெங்காயம், வெந்த வெள்ளைப் பூண்டு இல்லாமல் உங்கள் அன்றாட உணவு இருக்க வேண்டாம்!
ரத்தக் கொதிப்பு நோயாளிகள் அவசியம் பின்பற்றவேண்டியவை!
  45 நிமிடங்களில் 3 கி.மீ  நடைப்பயிற்சி.
  30 நிமிட உடற்பயிற்சி/சைக்கிள் ஓட்டல்.
 25 நிமிடங்கள், யோகாவில் சூரிய வணக்கமும் ஆசனங்களும்.
 15 நிமிடங்கள் பிராணாயாமம். அதிலும் குறிப்பாக, சீதளி பிராணாயாமம்.
 20 நிமிடங்கள் தியானம்.
 6-7 மணி நேரத் தூக்கம்.
மேலே சொன்னவற்றில் கடைசி பாயின்ட் கட்டாயம். சாய்ஸில் விடவே கூடாது. முந்தைய பயிற்சிகளில் நீங்கள் எத்தனை பின்பற்ற முடியுமோ, அத்தனை நல்லது!
Source: Vikatan.com

தலைவலிக்கான தீர்வுகள்...

தலைவலிக்கான தீர்வுகள்...
*அடிக்கடி வரும் மைக்ரேன் தலைவலிக்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹைட்ரேஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும்.
* சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, 'திருவள்ளுவ மாலை’ எனும் நூல் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பொருட்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது... சாப்பிடவும் செய்ய வேண்டும்.
* அஜீரணத் தலைவலி, இரவு எல்லாம் 'மப்பேறி’ மறுநாள் வரும் ஹேங்-ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து தலைவலி போகும்.
* இஞ்சியை மேல் தோல் சீவி சிறுதுண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து தினமும் காலையில் அரை ஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல்.
இஞ்சி, சீரகம் இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை ஸ்பூன் சாப்பிடுவது 
வயிற்று வலிக்கான வருமுன் காக்க...
பித்தப்பைக் கல் வராது தடுக்கவும், சிறிய கல்லாக இருந்தால் சிரமம் அளிக்காது இருக்கவும், பின்வரும் உபாயங்கள் உதவும்.
 கரிசலாங்கண்ணி, மலச்சிக்கலை நீக்கி, பித்தத்தைத் தணிக்கும் மூலிகை. இதில் மஞ்சள் பூ, வெள்ளைப் பூ என இரண்டு வகை உண்டு. வெள்ளைப் பூ வகைதான் இதற்குச் சிறப்பு. இந்தக் கீரையை விழுதாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து, ஒரு மாத காலம் சாப்பிடலாம்.
 ஒரு சாண் அளவு வளர்ந்திருக்கும் கீழாநெல்லி செடியை வேருடன் பிடுங்கி, நன்கு கழுவி, அரைத்து மோரில் இரண்டு சுண்டைக்காய் அளவு கலந்து சாப்பிடலாம்.
 சீரகத்தை கரும்புச் சாறு, கீழாநெல்லிச் சாறு, எலுமிச்சை சாறு, முசுமுசுக்கைச் சாற்றில் ஊறவைத்து (ஒவ்வொரு நாள் ஒவ்வொன்றாக ஊறவைத்து) வெயிலில் நன்கு உலர வைக்கவும். பின் மிக்ஸியில் பொடித்து காலையில் இரண்டு டீஸ்பூன், மாலை இரண்டு டீஸ்பூன் என உணவுக்கு முன்னதாகச் சாப்பிடலாம்.
 வாரம் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, உடலில் பித்தம் தணித்து கல் வராது தடுக்க உதவும். கல் வந்தவர்கள் தலைக்குக் குளிர்தாமரைத் தைலம், கீழாநெல்லித் தைலம், காயத்திருமேனித் தைலம்... என இவற்றில் ஒன்றைத் தேய்த்துக் குளிப்பது நலம்!
Source: Vikatan.com