செம்மொழித் தமிழின் பெருமையை மேலும் பன்மடங்கு உயர்த்த பெரும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில்.
தங்களது படத்தின் தலைப்பை “தூய தமிழில்”
“பொறுக்கி” என்று வைப்பதா?
“பொல்லாதவன்” என்று வைப்பதா?
“கெட்டவன்” என்று வைப்பதா? என பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் இவர்கள் கொடுக்கும் நெத்தியடி விளக்கங்களைக் கேட்டால், ஆனானப்பட்ட தமிழ்ப் பேராசிரியர்களே மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள்.
“பொறுக்கி” என்றால் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களையும், அநீதிகளையும் பொறுக்கி எடுப்பவன் என்கிறார், பல்வேறு “கலைப் படைப்புகளை” தமிழுக்கு அளித்த ஷக்தி சிதம்பரம். இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்காக வேறு பெயரையும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
“ “கெட்டவன்” என்றால், ஒரு பெண்ணால் கெட்டவன் என்று அர்த்தம். யாரையும் திட்டுவதாக அர்த்தம் வராது. பெயரை மாற்றப் போவதில்லை நான்” என்கிறார் சிலம்புக்கு அரசன்.
“ “பொல்லாதவன்” என்கிற வார்த்தை யாரையும் திட்டுகிற அர்த்தத்தில் இல்லை. அதைவிட எனது மாமனாரே இந்தப் பெயரில் நடித்திருக்கும் போது...அங்கிள் மெச்சிய மருமகனாய் அதே பெயரில் நடிப்பதில் என்ன தவறு?” என்கிறார் தனுஷ்.
அதானே! இவர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?
ரொம்ப ரொம்பச் சரி...
நாளை “எச்சக்கலை” என்று தலைப்பு வைத்தால் கூட “நாங்கள் கலைகளின் எச்சத்தைப் பற்றிப் படம் எடுக்கிறோம்” என்று போட்டுத் தாக்கக் கூடவா நமக்குத் தெரியாது?.
அதனால் அப்படியே வேலையோடு வேலையாக.....
பேமானி
சோமாறி
கசுமாலம்
கம்மனாட்டி
முடிச்சவிக்கி
மொள்ளமாறி
விருந்தாளிக்குப் பொறந்தவன்
போன்ற “அரிய” டைட்டில்களையும் உடனே பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே....
ஏமாந்து விட்டா வேற எவனாவது லவட்டீட்டுப் போயிருவான்.
-------------------------------------------------------------------------------------
மிகச் சரியாய்
இசைக்கும்
இசைக் கருவிக்கு
இங்கெவனோ
பெயர் வைத்தான்
‘தப்’பென்று. [‘பாரதி ஜிப்ரான்']
எல்லாரும்
காதலிக்கிறார்கள்
பின்னொரு நாளில்
வருத்தப்படுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக
சிலர் பிரிந்ததற்காக.... [‘பாரதி ஜிப்ரான்']
சுட்டது from குமுதம்
